செய்திகள்

புதுவை- கடலூர் சாலையில் விபத்துகளை தடுக்க அமைச்சர் கந்தசாமி நடவடிக்கை

Published On 2017-11-16 11:42 GMT   |   Update On 2017-11-16 11:42 GMT
புதுவை- கடலூர் சாலையில் தொடர் விபத்துகளை தடுக்க அமைச்சர் கந்தசாமி நடவடிக்கை மேற்கொண்டார்.

பாகூர்:

புதுவை- கடலூர் சாலையில் கடந்த சில நாட்களாக தொடர் விபத்துகள் நடந்து வருகிறது. குறிப்பாக தவளக்குப்பத்தில் இருந்து முள்ளோடை வரை தினமும் ஒன்றுக்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

இங்கு சாலைகள் விரிவுபடுத்தப்பட்டதால் தாறுமாறாக வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்குகிறார்கள். கடந்த 10 நாட்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டு 5-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் அமைச்சர் கந்தசாமி இன்று காலை பிள்ளையார் குப்பம் பகுதிக்கு வந்தார். அப்போது அவரிடம் பிள்ளையார் குப்பம் மற்றும் கந்தன்பேட் பகுதி மக்கள் தொடர் விபத்து குறித்து முறையிட்டனர். மேலும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ் பெக்டர் தனசேகரனை வரவழைத்து அமைச்சர் கந்தசாமி விபத்துகளை தடுக்க எடுக்கப்பட வேண் டிய நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் சாலைகளில் எல்லைக்கோடு, வேகதடை அமைப்பது குறித்தும், மின் விளக்குகள் பொறுத்துவது குறித்தும் ஆலோசனைகளை அமைச்சர் கந்தசாமி வழங்கினார்.

Tags:    

Similar News