செய்திகள்

ஆர்.கே.நகர் தேர்தலை நடத்தக்கூடாது: என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல்

Published On 2017-10-23 09:32 GMT   |   Update On 2017-10-23 09:32 GMT
பணப்பட்டுவாடா வழக்கு பதிவு செய்யாமல் ஆர்.கே.நகர் தேர்தலை நடத்தக்கூடாது என்று பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஆளும் அ,தி.மு.க.வினர் 100 கோடி ரூபாய் வரை பணம் பட்டுவாடா செய்தது அம்பலமாகி தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 89 கோடி ரூபாய் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான ஆவணங்களை வருமான வரித்துறை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியும் உள்ளது.

ஆனால் தேர்தல் ஆணையம் இதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்குள் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதலால் ஏற்கனவே நடந்த தவறு மீது விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பிறகுதான் ஆர்.கே.நகர் தேர்தலை நடத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

Similar News