search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nr dhanabalan"

    நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என். ஆர். தனபாலன் தெரிவித்துள்ளார். #neetexam
    கரூர்:

    கரூரில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீட் தேர்வினால் மருத்துவ கனவு தகர்ந்ததால் பிரதீபா என்கிற மாணவி தற்கொலை செய்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. நீட் தேர்வு விலக்கு பற்றி சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதல் பெற தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்காததே நீட் தேர்வு தமிழகத்தில் தொடர்ந்து நடந்து ஏழை மாணவ-மாணவிகளை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

    காலா திரைப்படத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த திரவிய நாடார் வாழ்க்கை வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கரூர் நகரத்தார் சங்க கட்டிடத்தில், கரூர் மாவட்ட பெருந் தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் கூடலரசன்  தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.என்.சேகர், மாவட்ட அவை தலைவர் பரமத்தி துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் நிறுவன தலைவர் என்.ஆர். தனபாலன் கலந்து கொண்டு  பேசினார். இதில் கோயம்பள்ளி மேம்பால பணியை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

    கூட்டத்தில், தலைமை நிலைய செயலாளர் சிவக்குமார், மாவட்ட துணை தலைவர் மோகன், உயர் மட்டக்குழு உறுப்பினர் விஜய்மாரிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். #neetexam
    ×