செய்திகள்

ராஜபாளையத்தில் சங்கப்பணத்தில் ரூ.7 லட்சம் மோசடி

Published On 2017-10-07 10:05 GMT   |   Update On 2017-10-07 10:05 GMT
ராஜபாளையத்தில் பொது நல பண்டு பணத்தில் ரூ.7 லட்சத்து 18 ஆயிரத்தை மோசடி செய்த தலைவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ராஜபாளையம்:

ராஜபாளையம் கவிமணி தேசிக விநாயகம் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 40). இல்லத்துப்பள்ளைமார் பொதுநல பண்டு முன்னாள் செயலாளரான இவர், ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், பண்டு தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் பழனிசாமி, அலுவலக உதவியாளர் பிச்சை ஆகியோர் விதிகளுக்கு புறம்பாக ரூ.7 லட்சத்து 18 ஆயிரத்தை வங்கியில் இருந்து கையாடல் செய்து தங்களது சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளார்.

ராஜபாளையம் கோட்டை தளவாசல் தெருவைச் சேர்ந்தவர் சக்தி (38). இவர், கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் சகோதரி தனலட்சுமி குடும்பத்திற்காக ரூ.11 லட்சத்து 40 ஆயிரம் செலவு செய்தேன். அந்த பணத்தை திருப்பி தருவதாக எழுதி கொடுத்திருந்த சகோதரி மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது அதனை தராமல் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கோர்ட்டு உத்தரவுப்படி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தினார். தொடர்ந்து தனலட்சுமி, அவரது மகள்கள் கீர்த்திகா, ரஞ்சனி, கீர்த்திகாவின் கணவர் ராம்பிரகாஷ் அவரது பெற்றோர் ராஜகோபால் ராஜா ஆனந்தம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
Tags:    

Similar News