செய்திகள்

முதுமலையில் நாளை யானைகள் நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா

Published On 2017-08-24 10:32 GMT   |   Update On 2017-08-24 10:32 GMT
முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுலா பயணிகள் பார்வையிட வனத்துறையினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
ஊட்டி:

விநாயகர் சதுர்த்தி விழா நாளை (25-ந்தேதி) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழாவும் நாளை நடைபெறுகிறது.

முதுமலை தெப்பக்காட்டில் 23 வளர்ப்பு யானைகள் உள்ளன. இந்த யானைகள் நாளை காலை அங்குள்ள மாயார் ஆற்றுக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. அங்கு குளிக்க வைக்கப்பட்டு யானைகள் அலங்கரிக்கப்படுகிறது.

அலங்கரிக்கப்பட்ட யானைகள் ஊர்வலமாக அழைத்து வரப்படுகின்றன. தெப்பாக்காடு முகாமில் உள்ள விநாயகர் கோவில் ஒரு யானை மணி அடித்து பூஜை செய்கிறது.

மற்ற யானைகள் வரிசையில் நின்று விநாயகரை வணங்கும். பூஜை நடந்த பின்னர் யானைகளுக்கு சிறப்பு உணவாக பொங்கல், கரும்பு, ராகி, பழம் மற்றும் பயிறு வகைகள் வழங்கப்படுகின்றன. யானைகள் நடத்தும் இந்த விநாயகர் சதுர்த்தி விழாவை வெளி மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கண்டு ரசிப்பார்கள்.

இதற்காக வனத்துறையினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
Tags:    

Similar News