search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சதுர்த்தி"

    விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார்.

    விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார்.

    அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.

    விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார்.

    தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப்போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன்.

    மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.

    இந்த அவமானத்தை பொறுத்துக்கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள்.

    அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள்.

    சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள்.

    அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார்.

    அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி.

    கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள்.

    அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள்.

    ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள்.

    அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள்.

    அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்.

    விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான்.

    அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார்.

    அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது.

    அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை.

    • பாயில் அமர்ந்து கீழ்க்கண்ட சுலோகத்தைக் கூறி விநாயகரை பிரார்த்தனை செய்ய வேண்டும்.
    • மேலே சொன்ன மந்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்யவும்.

    மணை அல்லது பாயில் அமர்ந்து கீழ்க்கண்ட சுலோகத்தைக் கூறி விநாயகரை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    வக்ரதுண்ட மஹாகாய கோடி ஸூர்ய ஸமப்ரப !

    அவிக்நம் குரு மே தேவ ஸர் வகார்யேஷு ஸர்வதா!!

    உடைந்த கொம்பையுடைய (ஸ்ரீ விநாயகப் பெருமான், வியாசர் சொல்ல ஸ்ரீமகாபாரதத்தைத் தன் கொம்பை உடைத்து எழுதினார் என்பது புராணக் கூற்று) பெரிய உடம்புடன் கூடிய பலகோடி சூரிய பிரகாசமுடைய இறைவனே! என்னுடைய எல்லா காரியங்களிலும் எப்போதும் எந்தவிதமான இடைஞ்சலும் இல்லாமல் இருக்க நீ அருள் புரியவேண்டும்.

    அடுத்து ஸ்ரீ விநாயகருக்கு உகந்த அருகம்புல்லால் கீழ்க்கண்ட மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சிப்பது குடும்ப நலனுக்கு உகந்தது..

    ஓம் கம் கணபதயே நமஹ !

    மஞ்சள், குங்குமம், சந்தனம், நீர் சேர்த்த அரிசியில் (அட்சதை) புஷ்பங்களும் (வெள்ளெருக்கு, செவ்வரளி, செம்பருத்தி, வெண் தாமரை) அருகம்புல் கொண்டு அர்ச்சிக்கவும்.

    மேலே சொன்ன மந்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்யவும்.

    • வடக்குப்பக்கம், மேற்குப்பக்கம் பார்க்க பிள்ளையாரை வைத்து பூஜிக்கலாம்.
    • மஞ்சள் சந்தனம் குங்குமத்தை பிள்ளையார் நெற்றியில் வைக்க வேண்டும்.

    விநாயகர் சதுர்த்தி அன்று காலையில்தான் களிமண் விநாயகரை வாங்க வேண்டும்.

    முதல் நாள் வாங்கி வைக்கக் கூடாது கிழக்குப் புறமாக தலைவாழை இலை (நுனி இலை) போட்டு அதன்மேல் நெல் பரப்பி, அதற்கு மேல் இன்னொரு நுனி இலை போட்டு பச்சரிசியை நிரப்பி, அதன்மேல் களிமண் பிள்ளையார் வைக்கவேண்டும்.

    வடக்குப்பக்கம், மேற்குப்பக்கம் பார்க்க பிள்ளையாரை வைத்து பூஜிக்கலாம்.

    ஆனால், தெற்குப்பக்கம் பார்த்து வைப்பதோ, பூஜிப்பதோ கூடாது.

    மஞ்சள் சந்தனம் குங்குமத்தை பிள்ளையார் நெற்றியில் வைக்க வேண்டும்.

    பிம்பத்துக்கு தொப்புளில் நாணயம் வைத்து மூட வேண்டும்.

    அதன்பின் பிள்ளையாருக்குப் பூணூல் அணிவித்து, வெள்ளெருக்கம்பூ மாலை மற்றும் அருகம்புல் மாலை சார்த்தி பூஜிப்பது சிறப்பானது.

    • விநாயகர் விரதத்தை நாற்பத்து ஐந்து நாட்கள் அனுசரிக்க வேண்டும்.
    • முதலில் கன்றுக்குட்டி சாணத்தால் பிள்ளையார் ஒன்று செய்து கொள்ள வேண்டும்.

    நாம் வாழ்க்கையில் சிறப்புடன் விளங்கவும், நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்பதற்காகவும்,

    சில பல விரதங்களை மேற்கொள்கிறோம்.

    அவற்றுள் ஒன்று விநாயகர் விரதம்.

    விநாயகர் விரதத்தை நாற்பத்து ஐந்து நாட்கள் அனுசரிக்க வேண்டும்.

    தினமும் காலையில் எழுந்து நீராடிய பின்பு பூஜை செய்ய வேண்டும்.

    பூஜைக்கு உரிய பொருட்கள்-நல்லெண்ணெய், பசும்பால், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம், குங்குமம், பூ முதலியவை.

    முதலில் கன்றுக்குட்டி சாணத்தால் பிள்ளையார் ஒன்று செய்து கொள்ள வேண்டும்.

    இதை பூஜை ஆரம்பிக்கும் அன்று செய்யக்கூடாது.

    இந்த ஒரே பிள்ளையாரை தான் நாற்பத்து ஐந்து தினங்களுக்கும் பூஜை செய்ய வேண்டும்.

    எனவே பத்திரமாகக் கையாள வேண்டும்.

    குளித்து முடித்து சுத்தமான உடை உடுத்தி விளக்கேற்றி வைத்து, பிள்ளையாரை ஒரு சிறு மேடையில் வைக்க வேண்டும்.

    பிறகு அபிஷேகத்தை தொடங்கலாம்.

    முதலில் நல்லெண்ணெய் அபிஷேகம் முறைப்படி செய்தல் வேண்டும்.

    பிறகு பால் அபிஷேகம், தயிர் அபிஷேகம், பழச்சாறு அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம்

    எல்லாம் செய்து முடித்து பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் முதலியவற்றால் பொட்டு இட்டு பூ சூட்டவும்.

    தேங்காயை உடைத்து வைத்து ஏதாவது ஒரு நைவேத்தியம் செய்யவும்.

    எளிமையான முறையில் அமைய வேண்டும் என்று நினைத்தால் வாழைப்பழம், சர்க்கரை முதலியவற்றை

    நைவேத்தியத்திற்குப் பயன்படுத்தலாம்.

    பிறகு தீபாராதனை செய்யவும்.

    விநாயகர் கவசம், விநாயகர் துதிப்பாடல்கள் முதலியவற்றைப் பாராயணம் செய்தல் வேண்டும்.

    பாராயணத்தை முடித்த பின் மறுபடியும் கற்பூர ஆரத்தி செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    காரியத்தில் தடங்கலோ, தாமதமோ ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்வதற்காக விநாயகரை வழிபட,

    உடனே அக்காரியத்தில் விநாயகர் வெற்றியை நல்குவார்.

    இது மட்டுமல்ல, விநாயகருக்குள் சகல சக்திகளும் அடக்கம்.

    ஆதலால் அவர் சகல சவுபாக்கியங்களையும் தருவதுடன் முக்தியும் அருளுவார்.

    • விநாயகரை சிறப்பாக பூசிக்கும் நாள் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி என்னும் நான்காம் நாள் ஆகும்.
    • விநாயக சதுர்த்தியில் விநாயகரை கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

    விநாயகரை சிறப்பாக பூசிக்கும் நாள் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி என்னும் நான்காம் நாள் ஆகும்.

    அதற்கு விநாயகர் சதுர்த்தி என்று பெயராகும்.

    வைகாசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருப்பவர்களும் உண்டு.

    கார்த்திகை மாதத் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்களும்

    விநாயகர் விரதம் கொண்டாடுவார்கள்.

    விநாயக சதுர்த்தியில் விநாயகரை கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

    வீட்டிலேயே பூஜை செய்ய விருப்பமுள்ளவர்கள் பூஜை அறையில் சாணம், சந்தனம், வெல்லம், மஞ்சள், புற்று மண்

    இவற்றில் ஏதேனும் ஒன்றில் விநாயகர் திருவுருவைப் பிடித்து வைத்துப் பூஜை செய்யலாம்.

    இவ்வுருவங்கள் பூஜை முடித்த பின்னால் நீரில் விடுதல் வேண்டும்.

    • சீதையைத் தேடுவதற்காக அனுமார் இவ்விரதத்தை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
    • இவ்விரதத்தை மேற்கொண்ட தேவேந்திரன் மூவுலகத்தையும் ஆண்டிருக்கின்றார்.

    பார்வதி தேவி, சிவபெருமான், அரிச்சந்திரன் ஆகியோர் சதுர்த்தி விரதம் இருந்து சங்கடம் நீங்கியுள்ளனர்.

    சீதையைத் தேடுவதற்காக அனுமார் இவ்விரதத்தை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

    இவ்விரதத்தை மேற்கொண்ட தேவேந்திரன் மூவுலகத்தையும் ஆண்டிருக்கின்றார்.

    பஞ்சபாண்டவர்கள் நாடிழந்து வனவாசம் சென்ற பொழுது இந்த விரதத்தை பகவான் விஷ்ணுவின் அறிவுரைப்படி

    மேற்கொண்டு குருச்சேத்திரப் போரில் பகைவர்களை வென்றிருக்கின்றனர்.

    கந்தக் கடவுளாம் முருகக் கடவுளே தவத்தில் சிறந்த முனிவர்களிடம் மனிதர்களின் சிக்கல்கள் தீர,

    விநாயகப் பெருமானுக்குரிய இந்த சங்கடஹர சதுர்த்தியைத் தான் வலியுறுத்திக் கூறியிருக்கின்றார்

    என்று சான்றோர்கள் எடுத்துரைப்பார்கள்.

    போராட்டங்களை சந்தித்தவர்களெல்லாம் இந்த விரத்தினால் பலன் பெற்றிருப்பதால் முறையாக நாமும்

    சங்டஹர சதுர்த்தி விரதத்தை முறைப்படி மேற்கொண்டு மனக்கஷ்டமும், பணக்கஷ்டமும்

    இல்லாமல் வாழலாம் அல்லவா?

    சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடிப்போம்.

    சந்தோஷத்தோடு வாழ்வில் வளம் சேர்ப்போம்.

    • ‘ஓம் அச்யுதாய நம’ என்றும், ‘அனந்தாய நம’ என்றும் மூன்றுமுறை சொல்ல வேண்டும்.
    • கொடுத்துவிட்டு இரவு விரதமிருந்தவர்கள் அந்தக் கொழுக்கட்டையும் பாலும் குடிக்கலாம்.

    சதுர்த்தி தினத்தன்று காலையில் எழுந்து உடலையும், உள்ளத்தையும் சுத்தமாக்கி,

    அன்றைய தினம் சந்திரன் உதயமாகும் வரை எந்த உணவையும் உண்ணாது,

    விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

    பூஜைக்கு வேண்டிய பொருட்கள்!

    பிள்ளையார் செய்வதற்கு மஞ்சள்,

    பிள்ளையார் படம் அல்லது விக்கிரகம் (மாலை மற்றும் பூ அணிவிப்பதற்கு)

    அர்ச்சனை செய்வதற்கு மஞ்சள் கலந்த அட்சதை பூக்கள்,

    வாசனை மிக்க பூக்களால் ஆன மாலைகள்,

    பஞ்சபாத்திரம்,

    தீர்த்த பாத்திரத்தில் சுத்தமான நீர், மணி, தூபக்கால், தீபத்தட்டு, கற்பூரம்,

    குத்துவிளக்கு, திரி, எண்ணெய், ஊதுபத்தி, சாம்பிராணி, விபூதி, குங்குமம்.

    அமர்ந்து பூஜை செய்வதற்கு பலகை, இனிப்புச் சுவையுடைய நைவேத்யப் பொருட்கள்.

    (மோதகம், அப்பம், கொழுக்கட்டை ஏதேனும் ஒன்று. அவல், பொரி கடலையும் வைக்கலாம்)

    இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு பூஜையறையில் ஐந்துமுக விளக்கேற்றி,

    உள்ளங்கையை தீர்த்தத்தால் சுத்தம் செய்து பிறகு தீர்த்தத்தைப் பருகி

    'ஓம் அச்யுதாய நம' என்றும், 'அனந்தாய நம' என்றும் மூன்றுமுறை சொல்ல வேண்டும்.

    பிறகு இரண்டு உள்ளங்கைகளிலும் மஞ்சள் அரிசியான அட்சதையை வைத்துக் கொண்டு,

    'சுக்லாம்பரதம் விஷ்ணும் சசிவர்னம் சதுர்புஸம், ப்ரஸன்ன வதனம் த்யோயேத் ஸர்வ வின்னோப சாந்தயே'

    என்று கூறிய படி தலையில் ஐந்துமுறை குட்டிக் கொள்ள வேண்டும்.

    பிறகு தியானம் செய்ய வேண்டும்.

    தங்களுக்குத் தெரிந்த விநாயகர் அகவல், விநாயகர் பாடல், மந்திரங்களைச் சொல்லி மனமுருகி விநாயகரை வழிபட வேண்டும்.

    பூஜை செய்யும் பொழுது நைவேத்தியமாகப் படைக்கும் கொழுக்கட்டையை, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு

    கொடுத்துவிட்டு இரவு விரதமிருந்தவர்கள் அந்தக் கொழுக்கட்டையும் பாலும் குடிக்கலாம்.

    இயலாதவர்கள் உடல் நலம் கருதி இரவு உணவை பலகாரமாக உட்கொள்ளலாம்.

    பகலில் பால் அல்லது பழச்சாறு குடித்துக் கொள்ளலாம்.

    • விரதம் என்றால் உண்ணா நோன்பு என்று பொருள்.
    • சிலர் பால் மற்றும் பழம், பழச்சாறு இவற்றை உண்டு விரதத்தைப் பூர்த்தி செய்வர்.

    ஒவ்வொருவரும் தங்களுக்கு என்ன கோரிக்கை இருக்கிறதோ, அதற்கேற்ற கடவுளைத் தேர்ந்தெடுத்து

    அதற்குரிய நாளில் விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

    விரதம் என்றால் உண்ணா நோன்பு என்று பொருள்.

    உணவு உண்ணாமல் இறைவனை முழுமனதோடு வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    விரதம் என்றால் சிலர் முழுமையாக உணவு உண்ணாமல் இருப்பர், சிலர் காலையில் மட்டும் உணவு உண்ணாமல் இருப்பர்.

    சிலர் பால் மற்றும் பழம், பழச்சாறு இவற்றை உண்டு விரதத்தைப் பூர்த்தி செய்வர்.

    ஒவ்வொருவரும் தங்களுக்கு என்ன கோரிக்கை இருக்கிறதோ, அதற்கேற்ற கடவுளைத் தேர்ந்தெடுத்து

    அதற்குரிய நாளில் விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

    அந்த அடிப்படையில் இந்தக் காலக் கட்டத்தில் ஒரு மனிதனுக்கு சங்கடம் என்பது ஒன்று மனதால் வருகிறது அல்லது பணத்தால் வருகிறது.

    இந்த சங்கடங்கள் அகன்று சந்தோஷம் பெருக வேண்டுமானால்,

    முழு முதற்கடவுளாம் கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

    சதுர்த்தி என்றாலே நம் நினைவிற்கு வருபவர் கணபதி.

    ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் சதுர்த்தி 'பெரிய சதுர்த்தி' ஆகும்.

    ஒவ்வொருவரும் தங்களது ஆவல்கள் பூர்த்தியாக இந்த சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ளலாம்.

    பொதுவாக உண்ணா நோன்பு இருக்கின்ற பொழுது நமது உடலும் வலிமை பெறுகின்றது.

    உள்ளமும் இறை உணர்வால் பலம் பெறுகின்றது.

    சதுர்த்தி திதி தேய்பிறையில் வந்தால் அது சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகின்றது.

    • பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்ய இல்லத்தில் வளம் கொழிக்கும்.
    • திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பெற்று வருகிறது.

    விநாயகருக்கு அபிஷேகப் பொருள்கள் எல்லாம் உகந்தன.

    ஆயினும் சில குறிப்பிட்ட தலங்களில் ஒரு சில அபிஷேகப் பொருள்கள் மட்டும் குறிப்பாக சிறப்பித்துக் செய்யப்பெறுகின்றன.

    அவ்வகையில் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பெற்று வருகின்றது.

    பாலபிஷேகம்:

    வேலூருக்கு அருகில் உள்ள சேண்பாக்கம் என்னும் ஊரில் பால விநாயகருக்குத் தாமரைத் தண்டு நூலால் நெய் விளக்கேற்றி பாலபிஷேகம் செய்தால் புத்திரப் பேறு கிடைக்கும்.

    சந்தன அபிஷேகம்:

    செஞ்சேரிமலை என வழங்கப்பெறும் தென்சேரிகிரி மலையின் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள இவ்விநாயகருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்கியம் ஏற்படும்.

    பரணி, ரோகிணி புனர்பூசம், அஸ்தம், மூலம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகரை சந்தன அபிஷேகம் செய்து வணங்குவது சிறப்பைத் தரும்.

    தேனபிஷேகம்:

    திருப்புறம்பயத் தலத்தில் சிப்பி கிளிஞ்சல் முதலான கடல்படு பொருள்களால் ஆக்கப்பெற்ற விநாயகர் தேன் அபிஷேகப் பிரியர்.

    இவருக்கு எவ்வளவு தேன் அபிஷேகம் செய்யப்பட்டாலும் கீழே வழிந்தோடாமல் அனைத்தும் விநாயகர் வடிவுக்குள் போகக் காணலாம்.

    திருநீற்று அபிஷேகம்:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முன்புறம் உள்ள பொற்றாமரைக் குளத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர் திருநீற்று விநாயகர் என அழைக்கப்படுகின்றார்.

    அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் கைகளாலேயே அவருக்கு விபூதி அபிஷேகம் செய்து வணங்குகின்றனர்.

    மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகருக்குத் திருநீறு அபிஷேகம் செய்ய நினைத்த காரியம் பலிதமாகும்.

    கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம்:

    மிருகசீரிஷம், பூரம், அனுஷம் ஆகிய நட்சத்திர நாட்களில் விநாயகருக்குக் கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் வெற்றி உண்டாகும்.

    அன்ன அபிஷேகம்:

    பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்ய இல்லத்தில் வளம் கொழிக்கும்.

    சொர்ணாபிஷேகம்:

    திருவோணம் நட்சத்திர தினத்தன்று விநாயகருக்குச் சொர்ணாபிஷேகம் செய்யச் செல்வம் கொழிக்கும்.

    • நீர் - சரிந்த அவரின் தொந்தி, நீரைக் குறிக்கும்.
    • காற்று - இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம், காற்றைக் குறிக்கும்

    பஞ்சபூதங்களின் மொத்த உருவம்தான் விநாயகப் பெருமான்.

    அவர் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒரு பெரும் சக்தியை உணர்த்துகிறது.

    நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியன ஐம்பெரும் சக்திகள்.

    இந்த பஞ்சபூதங்களை நம் முன்னோர்கள் வணங்குவதற்குக் காரணம் அவை மனிதர்களால் அடக்கமுடியாத மாபெரும் சக்திகள் ஆகும்.

    அத்தகைய ஐம்பெரும் சக்திகளையும் உள்ளடக்கிய விநாயகர் பற்றிய விவரம் வருமாறு:

    நிலம் (பூமி) - விநாயகரின் மடித்து வைத்துள்ள ஒரு பாதம், பூமியைக் குறிப்பதாகும்

    நீர் - சரிந்த அவரின் தொந்தி, நீரைக் குறிக்கும்.

    நெருப்பு - அவரது மார்பு, நெருப்பைக் குறிக்கும்

    காற்று - இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம், காற்றைக் குறிக்கும்

    ஆகாயம் - இருபுருவங்களின் அரைவட்டம் நடுவில் வளைந்திருக்கும் கோடு ஆகாயத்தைக் குறிக்கும்.

    • அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது.
    • அன்றிலிருந்து அத்தினம் விநாயகர் சதுர்த்தி என்ற புனித தினமாக ஆகி விட்டது.

    விநாயகர் என்றால் "மேலான தலைவர்" என அர்த்தப்படும்.

    "விக்னேஸ்வரர்" என்றால் "இடையூறுகளை நீக்குபவர்" என்றும், "ஐங்கரன்" என்றால் ஐந்து கரங்களை உடையவரெனவும் அர்த்தப்படும்.

    "கணபதி என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும்.

    இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன.

    உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே (அவர் அவதரித்த தினம்) விநாயக சதுர்த்தி எனக் கொள்ளப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.

    ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச்சென்றார்.

    அப்போது தனக்கு காவல் காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் உருவாக்கி அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார்.

    அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது.

    எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்தி விட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்று விட்டார்.

    அச்சமயத்தில் வந்த சிவபிரானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

    அதனால் கோபம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டி விட்டு உள்ளே சென்று விட்டார்.

    நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து பிள்ளையார், சிரச்சேதமுற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார்.

    தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்து விட்டதை அறிந்த அவர் ஆவேசம் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.

    காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர்.

    காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் வெட்டி வருமாறு பணித்தார்.

    அதன்படி கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்ககளுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது.

    அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பார்வதியின் பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டி விட்டார்.

    இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

    சிவபிரான் அந்தப் பிள்ளையாருக்கு "கணேசன்" என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு கணபதியாகவும், நியமித்தார் என "நாரதபுராணத்தில்" தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுவே பிள்ளையாரின் அவதார சரிதம். இந்த நிகழ்ச்சி நடந்தது. சுக்கில பட்ஷ சதுர்த்தியன்றாகும்.

    அன்றிலிருந்து அத்தினம் விநாயகர் சதுர்த்தி என்ற புனித தினமாக ஆகி விட்டது.

    • விநாயகர் சதுர்த்தியன்று சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • ஏலம் மூலம் கிடைக்கப்படும் பணம் சொசைட்டி மூலம் பல தொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தெலங்கானா மாநிலம், ஐதராபாத்-பந்தலகுடா கீர்த்தி ரிச்மண்ட் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அத்துடன் விநாயகருக்கு லட்டு பிரசாதம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்நிலையில், விநாயகர் விஜர்சனம் நடைபெறுவதற்கு முன்பு விநாயகருக்கு வைத்து பூஜை செய்யப்பட்ட லட்டு ஏலம் விடப்படும்.

    அதன் மூலம் கிடைக்கப்படும் பணம் சொசைட்டி மூலம் பல தொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் விநாயகருக்கு வைக்கப்பட்ட லட்டு ரூ.1.20 கோடிக்கு ஏலம் போனது. இதனை அதே பகுதியில் வசிக்கும் ஒட்டு மொத்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து வாங்கிக் கொண்டனர். கடந்த ஆண்டு விநாயகருக்கு வைக்கப்பட்ட லட்டு ரூ.60.80 லட்சத்திற்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

    ×