செய்திகள்

ஆரணியில் பைக்குகள் திருடிய வாலிபர் கைது

Published On 2017-08-22 12:14 GMT   |   Update On 2017-08-22 12:14 GMT
ஆரணியில் பைக்குகள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி:

ஆரணி சேவூர் கிராமத்தில் தொடர்ந்து பைக்குகள் திருடு போனது. குறிப்பாக பொது இடத்தில் மக்கள் நிறுத்தி விட்டு செல்லும் பைக்குகள் அதிகம் களவு போனது. இது குறித்து, ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் குவிந்தன.

பைக் திருட்டில் ஈடுபடும் ‘களவாணி’ கும்பலை பிடிக்க போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சேவூர் கிராமத்தை சேர்ந்த முன்ரத்தினம் மகன் குமார் (வயது 30) என்கிற வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், குமார் தொடர்ந்து பைக்குகளை திருடி வந்ததை ஒப்புக் கொண்டார். மேலும், ‘களவாணி’ கும்பல் திருடி வரும் பைக்குகளையும் இவர் வாங்கி குறைந்த விலைக்கு விற்று வந்துள்ளார்.

மேலும், பிரச்சினை வரும் மற்றும் உதவாத பழைய இருசக்கர வாகனங்களை ‘கயலான்’ கடைக்கு உடைத்து காசாக மாற்றி கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதையடுத்து, குமார் கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News