செய்திகள்

இலங்கையில் விடுவிக்கப்பட்ட படகுகள் முற்றிலும் சேதம்

Published On 2017-08-20 17:30 GMT   |   Update On 2017-08-20 17:30 GMT
இலங்கையில் விடுவிக்கப்பட்ட 43 படகுகளும் தமிழகத்துக்கு கொண்டுவர முடியாத நிலையில் முற்றிலும் சேதமடைந்து உள்ளன.
ராமேசுவரம்:

தமிழக மீனவர்களை சிறைபிடித்து வரும் இலங்கை அரசு அவ்வப்போது மீனவர்களை மட்டும் விடுதலை செய்து விட்டு, படகுகளை விடுவிக்க மறுத்து வருகிறது. சமீபத்தில் 43 படகுகளை மட்டும் இலங்கை அரசு விடுவித்தது. அந்த படகுகளின் நிலையை ஆய்வு செய்யவும், அங்கிருந்து படகுகளை தமிழகத்துக்கு கொண்டு வரவும் தமிழக அரசின் மீன்துறை கூடுதல் இயக்குனர் சமீரன், உதவி இயக்குனர் மணிகண்டன், மீனவ சங்கத் தலைவர் சேசுராஜா, மெக்கானிக் ஆல்வின் உள்பட 7 பேர் இலங்கை சென்றனர். அங்கு அவர்கள், விடுவிக்கப்பட்ட 43 படகுகளையும் ஆய்வு செய்தனர். இதில் 5 படகுகள் கடலில் மூழ்கிய நிலையிலும் மற்ற படகுகள் முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மீனவ சங்கத்தலைவர் போஸ் கூறுகையில், “இலங்கையில் விடுவிக்கப்பட்ட 43 படகுகளும் தமிழகத்துக்கு கொண்டுவர முடியாத நிலையில் முற்றிலும் சேதமடைந்து உள்ளன. மூழ்கிய 5 படகுகளுக்கு முழுமையான நிவாரணமும், மற்ற படகுகளை பழுது நீக்க தேவையான உதவியை அரசே செய்து நல்லமுறையில் படகுகளை மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.” என்று கூறினார். 
Tags:    

Similar News