செய்திகள்

குமரி மாவட்டத்தில் 8 இடங்களில் தடையை மீறி பேரணி - பா.ஜ.க.வினர் மீது வழக்கு

Published On 2017-08-16 10:51 GMT   |   Update On 2017-08-16 10:51 GMT
குமரி மாவட்டத்தில் போலீஸ் தடையை மீறி பேரணி நடத்தியதாக பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவர் எம்.ஆர். காந்தி உள்பட 240 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி நேற்று பாரதிய ஜனதா இளைஞரணி சார்பில் மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த முடிவு செய்திருந்தனர்.

ஆனால் நாகர்கோவில் தவிர வேறு எந்த இடத்திலும் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் அனைத்து இடங்களிலும் திட்டமிட்டப்படி பாரதிய ஜனதா கட்சியினர் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.

நாகர்கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பேரணி நடந்தது.

இதை தொடர்ந்து அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் போலீஸ் தடையை மீறி பேரணி நடத்தியதாக பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவர் எம்.ஆர். காந்தி உள்பட 240 பாரதிய ஜனதா கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆரல்வாய்மொழியில் 31 பேர் மீதும், சுசீந்திரத்தில் 17, ராஜாக்கமங்கலத்தில் 19, திங்கள்சந்தையில் 50, களியக்காவிளையில் 47, இலவு விளையில் 41, திக்கணங்கோடு 47, நித்திரவிளையில் 43 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News