செய்திகள்

குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Published On 2017-07-22 08:03 GMT   |   Update On 2017-07-22 08:03 GMT
குட்கா ஊழல் விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் தூர்வாரப்பட்ட ஏரி, குளங்களை ஆய்வு செய்த பின் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் தூர்வாரப்பட்ட ஏரி குளங்களை ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆட்சியில் இருப்பவர்கள் செய்ய தவறியதால் நாங்கள் ஏரி, குளங்களை தூர் வாருகிறோம். நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். எங்களை பார்த்து நீர் நிலைகளை தூர் வாரும் பணியில் அ.தி.மு.க.வினரும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இந்த பணிக்கு கமி‌ஷன் பெற முயற்சிக்கின்றனர்.

குட்கா ஊழல் விவகாரம் குறித்து வருமான வரித்துறை சார்பில் கடிதம் வரவில்லை என்று தலைமை செயலாளர் பொய் சொல்கிறார். சட்டம் ஒழுங்கு அதிகாரிகளுக்கு தலைமை பொறுப்பில் உள்ள தலைமை செயலாளரே இதற்கெல்லாம் உடந்தையாக இருக்கிறார். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்ட விவகாரத்தில் முதல்-அமைச்சரிடம் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது.

இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்தால் ஒன்று கூடி போராட்டம் நடத்துவோம்.

அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என்று கமல் சொன்னது உண்மை தான். இணைய தளத்தில் அமைச்சர்கள் முகவரி அழிக்கப்பட்டது வெட்க கேடானது.

சசிகலா ஜெயிலில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது குறித்து கர்நாடக அரசு முறையாக விசாரிக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News