செய்திகள்

கொடுங்கையூர் தீ விபத்தில் மரணம் அடைந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2017-07-20 23:50 GMT   |   Update On 2017-07-20 23:50 GMT
கொடுங்கையூர் தீ விபத்தில் மரணம் அடைந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாவட்டம், பெரம்பூர் வட்டம், மீனாம்பாள் சாலை, சிட்கோ நகர் மெயின் ரோடு சந்திப்பு, கவியரசு கண்ணதாசன் நகரில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான உணவகத்தில், 15-7-2017 அன்று நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில், மூடியிருந்த உணவகத்தில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததில், சுமார் 48 நபர்கள் காயமடைந்தனர்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி கொடுங்கையூர், விவேகானந்தர் நகரைச் சேர்ந்த துரையின் மகன் பரமானந்தன் என்பவர் 19-7-2017 அன்றும், கவியரசு கண்ணதாசன் நகரைச் சேர்ந்த நன்னிலத்தின் மகன் அபிமன்யூ என்பவர் 20-7-2017 அன்றும் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த பரமானந்தன் மற்றும் அபிமன்யூ ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News