செய்திகள்

விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி

Published On 2017-07-07 11:20 GMT   |   Update On 2017-07-07 11:20 GMT
காதல் கணவரை சேர்த்து வைக்ககோரி இளம்பெண் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள தபசிலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் கவிதா (வயது 28). இவரும், அருப்புக்கோட்டை அருகே உள்ள பெரிய கட்டங்குடியைச் சேர்ந்த உறவினர் சரவணக்குமாரும் (29) காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு சரவணக்குமார் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து கவிதா விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜூன் 29-ந்தேதி அருப்புக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் சரவணக்குமார்- கவிதா திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள களத்தூரில் குடும்பம் நடத்தி வந்தனர்.

திருமணமான மறுநாளிலேயே சரவணக்குமாரின் தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்தது. உடனே தாயாரை பார்த்துவிட்டு வருவதாக சரவணக்குமார் கூறிவிட்டுச் சென்றார். அதன் பின்னர் அவர் களத்தூருக்கு திரும்பவில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ள முடிய வில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த கவிதா விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த கவிதா காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி திடீரென்று தூக்க மாத்திரைகளை தின்றார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்ட போலீசார் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கவிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

காதல் கணவரை சேர்த்து வைக்ககோரி இளம்பெண் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News