செய்திகள்

இன்று மாலை என்ஜினீயரிங் தரவரிசை பட்டியல் வெளியீடு

Published On 2017-06-22 10:15 GMT   |   Update On 2017-06-22 10:15 GMT
என்ஜினீயரிங் தரவரிசை பட்டியல் இன்று மாலை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளியிடப்படுகிறது. உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தரவரிசை பட்டியலை வெளியிடுகிறார்.
சென்னை:

அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் தரவரிசை பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு ஆன்லைன் மூலம் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் பதிவு செய்தனர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஜூன் 3-ந் தேதிக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி 1 லட்சத்து 40 ஆயிரத்து 451 மாணவர்கள் விண்ணப்பங்கள் அளித்தனர். அந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு 20-ந்தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.

உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலிவால் ரேண்டம் எண்ணை வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பதிவாளர் கணேஷ், செயலாளர் இந்துமதி, கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

என்ஜினீயரிங் தரவரிசை பட்டியல் இன்று மாலை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளியிடப்படுகிறது. உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தரவரிசை பட்டியலை வெளியிடுகிறார். சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதையொட்டி இன்று காலையில் நடைபெற இருந்த தரவரிசை பட்டியல் வெளியீடு நிகழ்ச்சி இன்று மாலையில் வெளியிட மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News