என் மலர்

  நீங்கள் தேடியது "Anna University"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்பதால் அங்குள்ள அறைக்கு சென்று பட்டமளிப்பு விழாவுக்கான அங்கி அணிந்து வந்தார்.
  • கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோரும் அங்கி அணிந்து வந்திருந்தனர்.

  சென்னை:

  பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்திருந்தார். நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற 'செஸ்' ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று தங்கினார்.

  இன்று தமிழகத்தின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். இதற்காக இன்று காலை 9.55 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து பிரதமர் மோடி கார் மூலம் புறப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்குக்கு வந்தார்.

  அவரை பல்கலைக்கழகத்தின் வேந்தரான கவர்னர் ஆர்.என்.ரவி வாசலில் நின்று வரவேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோரும் வரவேற்றனர்.

  பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்பதால் அங்குள்ள அறைக்கு சென்று பட்டமளிப்பு விழாவுக்கான அங்கி அணிந்து வந்தார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோரும் அங்கி அணிந்து வந்திருந்தனர்.

  பட்டமளிப்பு விழா மேடைக்கு சரியாக காலை 10 மணிக்கு வந்ததும் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது.

  விழாவுக்கு வந்த அனைவரையும் துணைவேந்தர் வேல்ராஜ் வரவேற்று பேசினார். இதைத் தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  விழாவில் பல்கலைக்கழக அளவில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி படிப்புகளில் முதலிடம் பெற்ற 69 மாணவ-மாணவிகளுக்கு பிரதமர் மோடி தங்கத்தால் ஆன பதக்கங்களை வழங்கினார்.

  இந்த 69 மாணவர்களில் 31 பேர் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகளில் படித்தவர்கள். மீதமுள்ள 38 பேர் இதர பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் படித்து முதலிடம் பிடித்தவர்கள்.

  பட்டமளிப்பு விழாவில் கவுரவ விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இறுதியாக பிரதமர் மோடி விழா பேரூரை நிகழ்த்தினார்.

  அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவுக்கு பிறகு 70 ஆண்டுக்கு பின் முதல் முறையாக பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்று பதக்கங்கள் வழங்கி உள்ளார்.

  பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றதால் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

  உயர் கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டில் எத்தனை கல்வி நிறுவனங்கள் உள்ளது என்ற பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

  ஒட்டு மொத்த உயர்கல்வி முதல் 100 கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டில் உள்ளவை-18

  தலை சிறந்த பல்கலைக் கழகங்கள் முதல் 100-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-21

  தலை சிறந்த கல்லூரிகள் முதல் 100-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-32

  தலை சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் முதல் 100-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-10

  தலை சிறந்த பொறியியல் கல்லூரிகள் முதல் 200-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-35

  தலை சிறந்த மேலாண்ம கல்வி நிறுவனங்கள் முதல் 100-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-11

  மருத்துவக் கல்வி நிறுவனங்கள் முதல் 100-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-8

  பல் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் முதல் 40-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-9

  சட்டக் கல்லூரிகள் முதல் 30-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-2

  கட்டிடக் கலை கல்லூரிகள் முதல் 30-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-6

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவை சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக அரங்கில் வருகிற 29-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
  • விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

  சென்னை:

  அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 7 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கின்றனர்.

  பட்டப்படிப்பு முடித்தவர்கள், மேற்படிப்பு செல்வதற்கும், வேலைவாய்ப்பு பெறவும் சான்றிதழ் அவசியம். ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த கல்வியாண்டு படிப்பு முடித்தவர்களுக்கு இன்னும் பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை.

  இதனால் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தவிப்பில் இருந்தனர். இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

  இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவை சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக அரங்கில் வருகிற 29-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

  இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

  இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறுகையில், "அண்ணா பல்லைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் முதல் மதிப்பெண்கள் பெற்ற பல்வேறு துறைகளை சார்ந்த 69 மாணவர்களுக்கு 10 கிராம் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. இந்த 69 மாணவ-மாணவிகளுக்கும் பிரதமர் நரேந்திரமோடி பதக்கம் அணிவிக்கிறார்.

  தங்கப்பதக்கம் பெறும் 69 பேரில் 31 மாணவ-மாணவிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாகங்களை சேர்ந்தவர்கள். 38 பேர் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் படித்தவர்கள்.

  பட்டமளிப்பு விழாவில் நேரில் பங்கேற்க அனைத்து ஆராய்ச்சி மாணவர்களையும் ஜூன் 23-ந்தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டு உள்ளோம்" என்றார்.

  இதற்கு முன்பு கடந்த 2021 மார்ச் 11-ந்தேதி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடந்தது. அப்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். இப்போது 29-ந்தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார்.

  இதையொட்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தரவரிசைப்பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாக பொறியியல் கல்லூரி முதலிடத்தை பிடித்துள்ளது.
  • கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பக்கூடிய கல்லூரிகள் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

  சென்னை:

  பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது.

  இந்த தரவரிசைப்பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாக பொறியியல் கல்லூரி முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பக்கூடிய கல்லூரிகள் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

  பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தற்போது வெளியிடப்பட்டுள்ள கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை பார்த்து தங்கள் கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • என்.ஆர்.ஐ. மாணவர்களை குறி வைத்து அனுப்பப்படும் இந்த மின்னஞ்சல்கள் போலியானது. இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.
  • மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு www.annauniv.edu என்ற இணைய தளத்தை மட்டுமே அணுக வேண்டும்.

  சென்னை:

  அண்ணா பல்கலைக் கழகத்தில் படிப்பதற்கு இடம் இருப்பதாக கூறி முன் பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

  இதுபற்றி அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

  அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கு இடம் இருக்கிறது. முதல் செமஸ்டர் கட்டணத்துடன் ரூ. 1 லட்சம் கட்டினால் முற்றிலும் இலவசமாக படிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு செய்துள்ளது போன்று போலி இ-மெயில்கள் பல மாணவர்களுக்கு சென்றுள்ளது.

  என்.ஆர்.ஐ. மாணவர்களை குறி வைத்து அனுப்பப்படும் இந்த மின்னஞ்சல்கள் போலியானது. இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு www.annauniv.edu என்ற இணைய தளத்தை மட்டுமே அணுக வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தேர்ச்சி விகித பட்டியலில் 6 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
  சென்னை:

  தமிழ்நாட்டில் 540-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன.

  அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என இக்கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன.

  என்ஜினீயரிங் கல்லூரிகள் வாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகித பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

  2018-ம் ஆண்டு நவம்பர்- டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகளில் பி.இ., பி.டெக்., மாணவர்களின் தேர்ச்சி விகிதங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.

  இதில் 481 இணைப்பு அங்கீகார கல்லூரிகளின் தேர்ச்சி விகித விவரங்களை கல்லூரிகள் வாரியாக உள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதினர்? அவர்களில் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றனர்? தேர்ச்சி விகிதம் எவ்வளவு? ஆகிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன.  தேர்ச்சி விகித பட்டியலின் படி 6 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை. இந்த கல்லூரிகளில் இருந்து பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு 682 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தோல்வி அடைந்துள்ளனர்.

  59 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறந்த தேர்ச்சி விகிதத்தை கொண்ட கல்லூரியில் கூட 85.57 சதவீத மாணவர்கள்தான் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தத்தில் 3 கல்லூரிகள் மட்டுமே 80 சதவீதத்துக்கும் அதிகமான தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அண்ணா பல்கலைக்கழகம் வரும் கல்வி ஆண்டில் கல்வி கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தி உள்ளது. #AnnaUniversity
  சென்னை:

  அண்ணா பல்கலைக்கழகத்தில் கடைசியாக 1999-ம் ஆண்டு கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

  ஊழியர்களின் சம்பளம், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஆய்வகங்களுக்கு புதிய உபகரணங்களை வாங்குதல் போன்ற காரணங்களால் செலவுகள் அதிகரித்துள்ளது. இதை சமாளிக்கவே கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கூறுகையில், ‘‘எந்தவொரு கல்வி நிறுவனத்துக்கும் கல்வி கட்டணம் உயர்வு என்பது தவிர்க்க முடியாதது. ஐ.ஐ.டி. நிறுவனத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை கல்வி கட்டணம் ரூ.25 ஆயிரமாக இருந்தது. தற்போது அங்கு கல்வி கட்டணம் ரூ.1 லட்சத்துக்கு மேல் உள்ளது’’ என்றார்.  கட்டண உயர்வுக்கு பிறகும் கூட தற்போதுள்ள கட்டணம் மற்ற தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களை விடவும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இருப்பதைவிடவும் குறைவாகத்தான் உள்ளது என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  புதிய கட்டணத்தின்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள சுய உதவி படிப்புகளுக்கான கல்வி கட்டணம் ரூ.14 ஆயிரத்து 665-ல் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படிப்புக்கான கட்டணம் ரூ. 9 ஆயிரத்து 250-ல் இருந்து ரூ.21 ஆயிரம் ஆகவும் மற்ற பல்வேறு படிப்புகளுக்கான கட்டணம் ரூ.8 ஆயிரத்து 250-ல் இருந்து ரூ.20 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது.

  மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கல்வி கட்டணத்தை உயர்த்தி விடுகின்றனர். ஆனால் நாங்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறோம் எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதிகாரிகள் மேலும் கூறியதாவது:-

  பல்கலைக்கழகத்தில் குடிநீர் மற்றும் மின்சாரத்துக்கான செலவுகள் அதிகரித்துவிட்டன. இதே போல பாதுகாப்பு மற்றும் ஆய்வகத்தில் பல்வேறு வசதிகளை செய்தல் போன்றவற்றாலும் செலவுகள் உயர்ந்துள்ளது. ஏற்கனவே மாநில அரசு பல்கலைக் கழகத்துக்கு வழங்கிய நிதியை 2012-2013-ம் ஆண்டில் இருந்து நிறுத்திவிட்டது.

  தற்போது உயர்க்கல்வித்துறை உதவியுடன் சில முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதன்படி நெல்லை, கோவை, மதுரை மண்டலங்களில் புதிய படிப்புகளை தொடங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
   
  இவ்வாறு அவர்கள் கூறினர். #AnnaUniversity
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாநில கல்லூரி, லயோலா கல்லூரி தேசிய தர வரிசை பட்டியலில் முதன்மை இடங்களை பிடித்திருப்பது பெருமை அளிப்பதாக கவர்னர் பன்வாரிலால் பாராட்டு தெரிவித்துள்ளார். #TNGovernor #AnnaUniversity
  சென்னை:

  தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  டெல்லியில் மனிதவள மேம்பாட்டு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த ஆண்டுக்கான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தரப்பட்டியலை ஜனாதிபதி வெளியிட்டார். அதில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாநில கல்லூரி, லயோலா கல்லூரி ஆகியவை பட்டியலில் முதன்மை இடங்களை பிடித்திருப்பது மிகுந்த பெருமை அளிப்பதாக உள்ளது.

  பல்கலைக்கழகங்கள் வரிசையில் அண்ணா பல்கலைக்கழகம் 7-வது இடத்தையும், பொறியியல் கல்வி நிறுவனங்கள் 9-வது இடத்தையும் பிடித்திருப்பதற்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும். கல்லூரிகள் வரிசையில் மாநில கல்லூரி 3-வது இடத்தையும், லயோலா கல்லூரி 6-வது இடத்தையும் பெற்றிருப்பது, உயர் கல்வியில் அவர்களின் சிறப்பான செயல்பாட்டினால் கிடைத்த இடமாகும்.

  இந்த புகழுக்கும், சாதனைக்கும் கடுமையாக உழைத்த துணைவேந்தர்கள், முதல்வர்கள், மாணவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNGovernor #AnnaUniversity
   
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அண்ணா பல்கலைக்கழக தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் 37 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். #AnnaUniversity #RevaluationScam
  சென்னை:

  அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு தலைமை அலுவலகத்தில் பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளிடம்  விசாரணை நடத்தப்பட்டது.  

  அண்ணா பல்கலைக்கழகமும் தனியாக விசாரணை நடத்தி வந்தது. இதில் கடந்த 2017,2018ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் மாணவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு விடைத்தாள்களை மாற்றி வைத்ததாக  தற்காலிக பணியாளர்கள் மீது  குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

  இந்நிலையில் பணியாளர்கள் மீதான குற்றச்சாட்டு மற்றும் தேர்வு முறைகேடு குறித்து அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர், தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 7 மண்டலங்களைச் சேர்ந்த 37 தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  #AnnaUniversity #RevaluationScam

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை குழு தலைவர் பதவியில் இருந்து துணைவேந்தர் சூரப்பா விலகுவதாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். #AnnaUniversity

  சென்னை:

  அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக இருக்கும் சூரப்பா பொறியியல் படிப்புக்கான (பி.இ.) மாணவர் சேர்க்கை குழுவின் தலைவராக இருந்து வந்தார்.

  இந்த நிலையில் மாணவர் சேர்க்கை குழு தலைவர் பதவியில் இருந்து சூரப்பா திடீர் என்று ராஜினாமா செய்தார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை உயர் கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.

  அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் ஏற்படுவதால் பதவி விலகுவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  அவரது பதவி விலகலால் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்துவதில் தாமதம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

  அண்ணா பல்கலைக் கழகத்துக்கு பதில் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் நடத்தும் என்று தெரிகிறது. #AnnaUniversity

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 250 கோடி ரூபாய் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு 538.10 கோடி ரூபாய் தொகுப்பு நல்கைத் தொகையாக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #Budget2019 #OPS
  சென்னை:

  தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

  வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் பயில்வதற்கு வழிவகை செய்யும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தினை, இந்த அரசு முழு உத்வேகத்துடன் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, 4.19 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

  இத்திட்டத்திற்காக 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 248.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  2019-2020-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக் கல்வித்துறைக்காக 28,756.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  மூன்று பல்வகை தொழில் நுட்பக் கல்லூரிகளை 2018- 2019ஆம் கல்வி ஆண்டில் அரசு நிறுவியுள்ளதுடன், 29 சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் தொடங்கவும் அனுமதி வழங்கியுள்ளது. 2019- 2020ஆம் ஆண்டில், ராமேஸ்வரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  முதல் தலைமுறை பட்டதாரி மாணவ- மாணவியருக்கு கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்கும் திட்டத்திற்காக 2019-2020ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 480.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  சர்வதேசத் தரத்திற்கு கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுள் ஒன்றாக, தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவும் சட்டங்களை அரசு இயற்றி சிவசுப்பிரமணிய நாடார் பல்கலைக்கழகம், சாய் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களை அரசு அனுமதித்துள்ளது.

  அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 250 கோடி ரூபாய் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு 538.10 கோடி ரூபாய் தொகுப்பு நல்கைத் தொகையாக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்பத் திறன்களும் சிறப்புத் தகுதிகளும் கொண்ட பணியாளர்களுக்கான தேவை உலக அளவில் வளர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, தொழிற் கல்லூரிகளில் உள்ள வசதிகளை சர்வதேசத் தரத்திற்கு தொடர்ந்து மேம்படுத்துவது அவசியமாகிறது.

  எனவே மாநிலத்தில் முதன்மையான பல்கலைக் கழகமான அண்ணா பல்கலைக்கழகத்திலும், தொழில்நுட்பக் கல்வி ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளிலும் சர்வதேசத் தரத்தில் கற்பித்தலுக்குத் தேவைப்படும் உபகரணங்கள் உள்ளிட்ட அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, அண்ணா பல்கலைக் கழகத்திற்கு 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

  இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNBudget2019 #Budget2019 #OPS #AnnaUniversity
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய தேர்வு முறை பற்றிய மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். #AnnaUniversity #StudentsProtest
  சென்னை:

  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அரியர் முறைப்படி, குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சி அடையாதோர்களுக்கான தேர்வு, அடுத்த செமஸ்டரில் தேர்வினை எழுதலாம் என இருந்தது. 2017-ம் ஆண்டில் இருந்து அம்முறை மாற்றப்பட்டு, கிரெடிட் முறை அமல்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.

  இதனால் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி வீதம் குறைகிறது எனவும், விடைத்தாள் திருத்தம் செய்யும் முறை கடுமையாக்கப் பட்டிருப்பதால் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளது எனவும் கூறினர். மேலும் இதனால் ஓராண்டு காலம் வீணாகிறது எனவும் வருத்தத்துடன் தெரிவித்திருந்தனர்.

  இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன் திரண்ட மாணவ, மாணவிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கிரெடிட் முறையை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து மாணவர்களிடம் பல்கலைக்கழக பதிவாளர் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாணவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக மனுவை பெற்றுக்கொண்டார்.

  இதற்கிடையே, தேர்வு சீர்திருத்தங்களை குறிப்பாக கிரெடிட் முறையை ரத்துசெய்ய முடியாது என பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார். 

  இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய தேர்வு முறை பற்றிய மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

  இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம்  பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய தேர்வு முறை பற்றிய மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அரியர் தேர்வுகளை எழுதுவதற்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும், மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் அவர்களது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். #AnnaUniversity #StudentsProtest
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo