செய்திகள்

சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வுக்கு கவர்னர் நேர்காணல்

Published On 2017-05-26 10:08 GMT   |   Update On 2017-05-26 10:08 GMT
சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை தேர்வு செய்ய கவர்னர் வித்யாசாகர் ராவ் நேர்காணல் நடத்தினார்.
சென்னை:

தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன.

இந்த பதவி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் துணைவேந்தர் பதவி இடங்கள் காலியாக உள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் தமிழக அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட பல்வேறு துறை செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

பின்னர் தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதனும், உயர் கல்வி துறை செயலாளர் சுனில் பாலிவாலும் கவர்னர் மாளிகை சென்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினர். 20 நிமிடம் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது.

4 பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் பதவி இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது பற்றி கவர்னரிடம் தெரிவிக்கப்பட்டது. விரைவில் துணைவேந்தர்களை தேர்வு செய்யுமாறும் கேட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில் இன்று சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை தேர்வு செய்ய கவர்னர் வித்யாசாகர் ராவ் நேர்காணல் நடத்தினார்.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான போட்டியில் தாண்டவன், வேல்முருகன், தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News