செய்திகள்

54 தனியார் நிறுவனங்கள் மூலம் 1¼ கோடி லிட்டர் பால் விற்பனை

Published On 2017-05-26 09:42 GMT   |   Update On 2017-05-26 09:42 GMT
தமிழகத்தில் தினமும் 1½ கோடி லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் ஆவின் நிறுவனம் மூலம் 25 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

தமிழகத்தில் தினமும் 1½ கோடி லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் ஆவின் நிறுவனம் மூலம் 25 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள 1¼ கோடி லிட்டர் பால் தனியார் நிறுவனங்கள் மூலம் வினியோகிக்கப்படுகிறது.

தனியார் பால் நிறுவனங்களில் ஆரோக்யா, திருமலா, ஹெரிடேஜ், டோட்லா, ஜெர்சி, ஹட்சன் ஆகியவை பெரிய நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்களின் பால் தமிழகம் முழுவதும் விற்பனையாகிறது.

மேலும் ஒவ்வொரு மாவட்டம் வாரியாகவும் தனியார் பால் கம்பெனிகள் செயல்படுகின்றன. மொத்தம் 54 தனியார் பால் கம்பெனிகள் தமிழகத்தில் பால் விற்பனை செய்கின்றன.

கோவை மாவட்டத்தில் சக்தி, அரோமா, கவுமா, மில்க் மிஸ்ட், ஏ.பி.டி., சுகுணா, கே.எஸ்., எல்.கே.எம்., நந்தினி, ஹர்ஸ்வத், ஹம்ரூத் ஆகிய தனியார் பால் நிறுவனங்கள் உள்ளன.

வேலூரில் கோமாதா, சுருதி, ஆஹா, அப்பு ஆகிய நிறுவனங்களும், மதுரை மாவட்டத்தில் ராஜ், சர்வோதயா நிறுவனங்களும், சேலம் மாவட்டத்தில் அர்ஜூனா, சரவணா கோல்டு, கவின், நந்தா ஆகிய நிறுவனங்களும் தர்மபுரி மாவட்டத்தில் அமிர்தா, அர்ஜுனா, வேலு, ஜெயவேல் ஆகிய நிறுவனங்களும் பால் விற்பனை செய்கின்றன.

நெல்லை மாவட்டத்தில் ஸ்டார்மில்க், நாஞ்சில், விஜய், அமிர்தா பால் பாக்கெட்டுகள் விற்பனையாகின்றன. தமிழகம் முழுவதும் தனியார் கம்பெனி பால் பாக்கெட்களையே பொது மக்கள் அதிகம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News