search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Milk sales"

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வரும் நிலையில் ஒரு லிட்டர் பால் ரூ.100க்கு விற்கப்பட்டு வருகிறது. #GajaCyclone
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளின் மாடியில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டிகள் புயலில் சேதமடைந்ததால் குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த குடிநீர் பாட்டிலை ரூ.50க்கு வியாபாரிகள் சிலர் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் ஒரு லிட்டர் பால் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மின்தடையால் மின்சாதன பொருட்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் உணவுகள் தயார் செய்ய முடியாமல் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பல இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்படாததால் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

    சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைப்பதற்காக நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் முழுமையாக சீரமைக்க இன்னும் 3 நாட்கள் வரை ஆகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

    கந்தர்வக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள மட்டங்காலில் அரசுக்கு சொந்தமான நுகர்பொருள் வாணிப கிடங்கு உள்ளது. இங்கு 12 மிகப்பெரிய கட்டிடங்களில் 50 ஆயிரம் நெல் மூட்டைகள், பருப்பு, கோதுமை, அரிசி என 12 ஆயிரம் மூட்டைகள் இருந்தன. இவற்றின் மேற்கூரைகள் சிமெண்ட்சீட்டால் அமைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் கஜா புயலால் சீட்கூரைகள் காற்றில் பறந்தன. இதன்மூலம் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அனைத்து உணவு பொருட்களும் மழையில் நனைந்து சேதமாகின. புயல் பாதிப்பு காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. #GajaCyclone
    ×