search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால் விற்பனை"

    • சேலம் மாவட்டத்தில் 810 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகிறது.
    • இதன் மூலம் 49 ஆயிரம் உறுப்பினர்களிடம் இருந்து தினசரி 4 லட்சத்து 90 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 810 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகிறது. இதன் மூலம் 49 ஆயிரம் உறுப்பினர்களிடம் இருந்து தினசரி 4 லட்சத்து 90 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    ஆடி திருவிழா

    இதில் சேலம் மாவட்டத்தில் உள்ளூர் தேவையான 2 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் தவிர மீதி உள்ள பால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனிடையே ஆடித்திரு விழாவையொட்டி சேலம் மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை கள் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் பால்குட ஊர்வலம், பாலாபி ஷேகம் பூைஜகள் உள்ளிட்ட வற்றிற்காக பாலை அதிக அளவில் வாங்கி வருகின்றனர்.

    20 ஆயிரம் லிட்டர் கூடுதல்

    ஆடித்திருவிழா காரண மாக நேற்று 2 லட்சத்து 34 ஆயிரம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது வழக்க மான விற்பனையை விட 20 ஆயிரம் லிட்டர் அதிகமாகும் என ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கலப்படம் செய்த, தரம் குறைவான பால் விற்பனை செய்பவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளி–யிட்டுள்ள செய்திக்கு–றிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் மாநில உணவுப் பாதுகாப்புதுறை ஆணையர் மற்றும் மாவட்ட கலெக்டரின் ஆணைக்கிணங்க உணவுப் பாதுகாப்பு துறையின் மூலம் மாவட்டம் முழுவதும் பால் விற்பனையில் கலப்ப–டம் எதுவும் செய்யப்பட்டுள்ளதா என தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் கடந்த மூன்று மாதங்களில் ராஜபாளையம், அருப்புக்கோட்டை, சிவ–காசி, ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் விருதுநகர் பகுதிக–ளில் 19 பால் உணவு மாதிரி–கள் எடுக்கப்பட்டது. அதில் 8 பால் உணவு மாதிரிகள் தரம் குறைவாக இருப்பதாக ஆய்வில் கண்ட–றியப்பட்டுள்ளது. தரம் குறைவான பால் விற்பனை–யாளர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் நீதிமன்றங்களில் தொடுக்கப் பட்டு அபராதம் விதித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. பால் விற்பனை யாளர்கள் அனைவரும் உணவு பாது–காப்பு துறையில் பதிவு அல்லது உரிமம் பெற்றிருக்க வேண்டும். தாங்கள் விற் பனை செய்யும் பாலில் தண்ணீர், ஸ்டார்ச், யூரியா மற்றும் அனுமதிக்கப்படாத பவுடர்கள் கலப்படமின்றி தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தொடர் ஆய்வுகளின் போது உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் இன் றியோ, தரம் குறைவான பாலினை நுகர்வோருக்கோ அல்லது பிற உணவுப்பொ–ருள் நிறுவனங்களுக்கோ விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் அவர்க–ளின் மீது துறைரீதியான கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    உணவு பொருட்கள் மற்றும் பால்பொருட்கள் தொடர்பான புகார்கள் எதுவும் இருந்தால், விருது–நகர் மாவட்ட உணவு பாது–காப்புத்துறை அலுவல–கத்திற்கு 04562 252255 அல்லது 94440 42322 என்ற மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையர், அலுவலக வாட்ஸ்ஆப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பாலின் விலையை உயர்த்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கூட்டுறவு சங்கத்தில் பால் வாங்க வந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் பால் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூரை அடுத்த இடிகரை பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது.

    இச்சங்கத்தில் இடிகரை சுற்றுவட்டார பகுதியில் உள்ள இடிகரை, சென்ன மாநாயக்கன்பாளையம், கோவிந்த நாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் பாலை விற்பனை செய்து வருகின்றனர்.

    இங்கு ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் வரை பாலை கூட்டுறவு சங்கத்தில் விற்பனை செய்து வருவதாக தெரிகிறது. கூட்டுறவு சங்கத்தின் மூலம் பெறப்படும் பால் அப்பகுதி பொதுமக்கள் வாங்கிச் செல்வதுடன் மீதமுள்ள பாலை ஆவினுக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர்.

    இந்நிலையில் மாடுகளை பராமரிப்பதற்கு தேவையான புண்ணாக்கு, பசும் தீவனம், ஆட்கள் கூலி உள்ளிட்டவர்கள் விலை உயர்வு காரணமாக பால் கொள்முதல் விலை கட்டுபடி ஆவதில்லை.

    எனவே பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என்று இடிகரை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பாலை விற்பனை செய்து வரும் விவசாயிகள் இன்று ஒரு நாள் பாலை சங்கத்தில் ஒப்படைக்காமல் சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மாடுகளை பராமரிக்க தேவையான வேலை ஆட்கள், புண்ணாக்கு, பசும் தீவனம், மருத்துவச் செலவு உள்ளிட்டவை கடுமையாக விலை உயர்ந்துள்ளதால் எங்களால் பராமரிக்க இயலவில்லை, கூட்டுறவு சங்கம் கொடுக்கும் பால் விலை கட்டுபடியாகவில்லை, எனவே பாலின் விலையை உயர்த்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அரசு வங்கிகள் மூலம் கடன் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

    அந்த நேரத்தில் கூட்டுறவு சங்கத்தில் பால் வாங்க வந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் பால் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதில் ஒரு பெண்மணி இவ்வாறு போராட்டம் நடத்தினால் முன்னரே அறிவிக்க வேண்டும். எங்களுக்கு குழந்தைகள், வயதானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பாலுக்கு எங்கு செல்வது என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    ×