என் மலர்
நீங்கள் தேடியது "Tamil Nadu"
- பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை.
- கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது மேகதாது அணை திட்டம்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்து இருக்கிறார். மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று உள்ளார். அதன்படி பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை நடத்தினார். அதில் துறைரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிகே சிவக்குமார், "காங்கிரஸ் கட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும். கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முக்கிய திட்டம், மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்திப்பேன்."
"விரைவில் அனுமதி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்வேன். மேகதாது அணை கட்டுவது எங்கள் உரிமை. வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை, " என்று தெரிவித்தார்.
- கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனை நடத்திய அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
- சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கரூர்:
தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கோவை, கரூர் மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஆந்திர மாநிலம் ஐதராபாத் பகுதிகளில் இந்த சோதனையானது நடக்கிறது. டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.
இந்நிலையில் கரூரை அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனை நடத்திய அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதேபோல் மற்ற இடங்களிலும் அதிகாரிகளை திமுகவினர் முற்றுகையிட்டு பணியை செய்யவிடாமல் தடுத்தனர். இதனால் கரூரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறுத்தப்பட்டது. 8 வாகனங்களில் வந்திருந்த அதிகாரிகள் கரூர் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இனி அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளிடம் கலந்துபேசி முடிவு செய்வார்கள்.
- தமிழ் நாட்டின் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
- அரசு ஒப்பந்ததார்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுக்க 40-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக், மின்துறை தொடர்பான அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ் நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது. தமிழகத்தின் கரூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் சில ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூரை அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனை நடத்தி வரும் அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டனர். திமுக தொண்டர்களில் ஒருவரை அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
- தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு ஏற்கனவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.
- தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் நாட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சென்னையை தவிர 25 மாவட்டங்களுக்கு ஏற்கனவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்து இருக்கிறார்.
தமிழகத்தில் புதிய அணைகள் கட்டும் பணி, குடிமராமத்து, நீர்நிலைகளை மீட்டெடுத்தல், நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க தனியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, வெள்ளநீர் தடுப்பு நடவடிக்கை, திடக்கழிவு மேலாண்மை, ஊரக பகுதி மக்களுக்கான அடிப்படை வசதி தேவைகள் உள்ளிட்ட பணிகளையும் இவர்கள் கண்காணிப்பார்கள்.
மாவட்ட நிர்வாகத்துடன் கண்காணிப்பு அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்புவார்கள். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் பெயர் விவரம் வருமாறு:-
அரியலூா் மாவட்டம்-சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை செயலா் அருண்ராய், கோவை மாவட்டம்-டிட்கோ நிா்வாக இயக்குநா் ஜெயஸ்ரீ முரளிதரன். கள்ளக்குறிச்சி மாவட்டம்-நெடுஞ்சாலைகள் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், காஞ்சீபுரம் மாவட்டம்-ஊரக வளா்ச்சித்துறை முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா்.
செங்கல்பட்டு மாவட்டம்- விவசாயத்துறை செயலாளர் சமயமூர்த்தி, திருவள்ளூர் மாவட்டம்-சிவில் சப்ளை கமிஷனர் வி.ராஜாராமன். நாகப்பட்டினம் மாவட்டம்-எரிசக்தித் துறைச் செயலா் ரமேஷ் சந்த் மீனா, நாமக்கல் மாவட்டம்-தகவல் தொழில்நுட்பவியல் துறைச் செயலா் குமர குருபரன், புதுக்கோட்டை மாவட்டம்-நில நிா்வாக ஆணையா் எஸ்.நாகராஜன்.
ராமநாதபுரம் மாவட்டம்-மனிதவள மேலாண்மைத் துறைச் செயலா் நந்தகுமாா், ராணிப்பேட்டை மாவட்டம்-தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், சேலம் மாவட்டம்-நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிா்வாக இயக்குநா் சங்கர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட் டம்-வணிகவரித்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி, கரூர்-மீன்வளத்துறை கமிஷனர் கே.எஸ். பழனிசாமி, மதுரை மாவட்டம்-முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன்.
புதுக்கோட்டை மாவட்டம்-எஸ்.நாகராஜன், தஞ்சாவூர் மாவட்டம்-ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர்-ஆனந்த், தேனி-கார்த்திக், தூத்துக்குடி மாவட்டம்-சிஜி தாமஸ் வைத்யன், திருப்பூர்-டான்சி, முதன்மை செயலாளர்-விஜயகுமார், வேலூர் மாவட்டம்-ஆதி திராவிட பழங்குடி நலத்துறை செயலாளர் லஷ்மி பிரியா, விழுப்புரம் மாவட்டம்-பஞ்சாயத்து ராஜ் கமிஷனர்-ஹர் சஷாய் மீனா, விருதுநகர் மாவட்டம்-ஆனந்தகுமார்.
- தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
- காஞ்சிபுரம் எஸ்பி சுதாகருக்கு, செங்கல்பட்டு எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
தமிழ் நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, விழுப்புரம் மாவட்ட டிஐஜியாக, சிபிசிஐடி டிஐஜி ஜியாவுல் ஹக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் எஸ்பி சுதாகருக்கு, செங்கல்பட்டு எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. கள்ளக்குறிச்சி எஸ்பி மோகன்ராஜ்-க்கு, விழுப்புரம் எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் போராட்ட காலங்களில் வரன்முறை செய்து ஆணை வெளியிட வேண்டும்.
- மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளர்களின் பணி வரன்முறை ஆணையை வெளியிட வேண்டும்.
திருவாரூர்:
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறை மாநில நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையின் போது ஏற்றுக்கொண்ட ஊராட்சி செயலாளருக்கு பணி விதிகளை மேலும் காலதாமதம் இன்றி வெளியிடுதல் மற்றும் விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளர்களின் பணி வரன்முறை ஆணையை வெளியிட வேண்டும், இணை இயக்குனர் உதவி இயக்குனர் உதவி பொறியாளர் உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் நிலையிலான அனைத்து பதவி உயர்வு ஆணைகளையும் உடனடியாக வெளியிட வேண்டும்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அரசு ஊழியர்களின் போராட்ட காலங்கள் வேலை நாட்களாக கருதி ஆணையிடப்படும் என அளித்த வாக்குறுதியின் படி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் போராட்ட காலங்களில் வரன்முறை செய்து ஆணை வெளியிட வேண்டும் ஊராட்சி செயலர்களுக்கு மாத மாதம் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் தமிழக அரசு மாநில நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையின் போது ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 900-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு ஊழக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் மாவட்டம் முழுவதும் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
- கூட்டத்தில் தமிழ்நாடு அரசியல் சூழல், மக்கள் பிரச்சினைகள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
- இது தொடர்பாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழ் நாடு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி வரும் 7 ஆம் தேதி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டை தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசியல் சூழல், மக்கள் பிரச்சினைகள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. இதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து, அதற்கேற்ப பணியாற்றும் வகையில், சிலருக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனினும் இதுபற்றி தமிழ் நாடு அரசு சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- நவகிரக கோட்டை சிவன் ஆலயத்தில் மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜை, 108 சங்காபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.
- மதுபானத்தால் இளைஞா்கள் குடித்து தங்களது வாழ வேண்டிய வாழ்க்கையை தொலைத்து கொண்டு உள்ளனா்.
பல்லடம் :
பல்லடம் சித்தம்பலம் கிராமத்தில் சிவபெருமானை மையமாக கொண்டு 27 நட்சத்திரங்கள், 9 அதி தேவதைகள், 9 நவகிரகங்கள்,108 சிவலிங்கங்கள், நவகிரக கணபதி உள்ளடங்கிய நவகிரக கோட்டை சிவன் ஆலயத்தில் மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜை, 108 சங்காபிஷேகம், சோபகிருது ஆண்டு விழா, வருண மகா மந்திர வேள்வி, சிவநாம பஜனை ஆகியவை நடைபெற்றன. இவ்விழாவில் கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரசுவாமிகள் அருளுரை நிகழ்த்தினாா்.
அதன் பின்னா் அவா் நிருபர்களிடம் கூறுகையில்-:தமிழகம் பல்வேறு துறைகளில் சிறந்த மாநிலமாக நாட்டுக்கே முன்மாதிரியாக திகழ்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம் தமிழகத்தில் மதுபானத்தால் இளைஞா்கள் குடித்து தங்களது வாழ வேண்டிய வாழ்க்கையை தொலைத்து கொண்டு உள்ளனா். எதிா்கால தலைமுறையை கவனத்தில் கொண்டு தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். திராவிட பேரரசாக திகழும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நினைத்தால் இதனையும் செயல்படுத்தி காட்ட முடியும் என்றாா்.
- தமிழ் நாட்டில் 12 மணி நேர வேலை திருத்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.
- 12 மணி நேர வேலை திருத்த சட்டம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 ணி நேரமாக உயர்த்துவது தொடர்பாக சட்ட மசோதா சமீபத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
மேலும், வேலை நேரத்தை அதிகரிக்கும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 12-ம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்து இருந்தன. இந்த நிலையில், தொழிலாளர் நலத்துறையின் 12 மணி நேர வேலை திருத்த சட்ட செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- வேலை நேர சட்ட திருத்தத்தை நிறைவேற்றி உள்ளதை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும்.
- தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
தஞ்சாவூர்:
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் ஏ.ஐ.டி.யூ.சி சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் தஞ்சையில் சங்கத் தலைவர் மல்லி தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.பொதுச் செயலாளர் அப்பாதுரை நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். பொருளாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.
இந்த கூட்டத்தில் தொழிற்சாலை சட்ட திருத்தத்தை சட்டமன்றத்தில் 8 மணி நேர வேலைக்கு பதிலாக 12 மணி நேரம் கூடுதலாக்கும் வேலை நேர சட்ட திருத்தத்தை நிறைவேற்றி உள்ளதை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும். இதனை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி தமிழ் மாநில குழு சார்பில் நாளை ( வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அழைப்பை ஏற்று நாளை தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன், நிர்வாகிகள் சுப்பிரமணியன், மனோகரன், இருதயராஜ், ரெஜினால்டு ரவீந்திரன், சாந்திசுந்தரராஜ், குணசேகரன், சோமசுந்தரம், சிவகுமார், கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் கஸ்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் துணைத் தலைவர் சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.