உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வு எழுத மாணவிகளை பரிசோதனை செய்த காட்சி.

சேலம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 262 பேர் நீட் தேர்வு எழுதினர்

Published On 2022-07-17 08:35 GMT   |   Update On 2022-07-17 08:35 GMT
  • எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ என்ற நுழைவு தேர்வு தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
  • நீட் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை5.20 மணிக்கு முடிவடைந்தது.

சேலம்:

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' என்ற நுழைவு தேர்வு தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் இன்று நீட்தேர்வு நடைபெற்றது.

நீட் தேர்வு எழுதுவதற்காக சேலம் மாவட்டத்தில் ஜெய்ராம் பப்ளிக் பள்ளி, செந்தில் பப்ளிக் பள்ளி, நோட்டரி டேம் பள்ளி, வித்யா மந்திர்பள்ளி, வைஷ்யா கல்லூரி, சக்தி கைலாஷ் கல்லூரி, ஏ.வி.எஸ். கல்லூரி, விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்பட 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வை 10 ஆயிரத்து 262 பேர் எழுதினர். அவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை கொண்டு வந்தனர்.

அவர்களுக்கு தேர்வு மையங்களில் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தேர்வு எழுத வருபவர்கள் அனைவரும் முககவசம் அணிந்திருந்தனர். நீட் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை5.20 மணிக்கு முடிவடைந்தது. ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News