search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "exam"

    • தேர்தல் முடிந்து 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை தேர்வுத் தாள்களை திருத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
    • கோடை வெயில் இன்னும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. பாராளுமன்ற தேர்தலும் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.

    இதனால் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளி இறுதி தேர்வு 2-ந்தேதி தொடங்கி 12-ந்தேதிக்குள் முடியும் என்றும் 13-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும். அதன் பிறகு ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு இருந்தது.

    மேலும் தேர்தல் முடிந்து 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை தேர்வுத் தாள்களை திருத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் ஈகை பெருநாளை முன்னிட்டு 2 தேர்வுகள் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. அதாவது 10-ந் தேதி நடைபெறுவதாக இருந்த அறிவியல் தேர்வை 12 நாட்கள் கழித்து 22-ந் தேதியும் 12-ந்தேதி நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வு 11 நாட்கள் கழித்து 23-ந்தேதியும் நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    கோடை வெயில் இன்னும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் 2 தேர்வுகளையும் முன் கூட்டியே முடித்து இருக்கலாம். மொத்தம் 5 தேர்வுகள் தான். 2-ந்தேதி முதல் 12-ந் தேதி வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் தேர்வு நடைபெறுகிறது. எனவே அந்த இடைவெளியை குறைத்து முன் கூட்டியே முடித்து இருக்கலாம். இது தேவையில்லாமல் குழந்தைகளை வெயிலில் வதைப்பதாகும் என்று பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.

    • பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் வெற்றி பெறுவது எளிது என கட்சித்தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர்.
    • தன்னை விலக்க கட்சியில் ஒரு சிலர் திட்டமிட்டு செயல்படுவதாக நமச்சிவாயம் கருதுகிறார்.

    புதுச்சேரி:

    தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆண்டுவிழாவில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதல்- அமைச்சருமான ரங்கசாமி, இதனை அறிவித்தார். ஆனால் பா.ஜனதா வேட்பாளர் யார்? என்பதில் தொடர்ந்து இழுபறியாக உள்ளது.

    புதுச்சேரி பா.ஜனதா நிர்வாகிகள், பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் வெற்றி பெறுவது எளிது என கட்சித்தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர்.

    அதேநேரத்தில் புதுச்சேரி அரசியலில் இருந்து தன்னை விலக்க கட்சியில் ஒரு சிலர் திட்டமிட்டு செயல்படுவதாக நமச்சிவாயம் கருதுகிறார்.

    அதோடு புதுச்சேரி அரசியலில் தொடரவும் அவர் விரும்புகிறார். இதனை கட்சித்தலைமையிடமும் தெரிவித்து, தான்போட்டியிட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

    அதேநேரத்தில் கட்சி யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவரை வெற்றி பெறச்செய்வது தனது பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், புதுச்சேரி கவர்னர் தமிழிசை, பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ., மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ. ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஏற்கும் வேட்பாளரை அறிவிப்பது என பா.ஜனதா கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

    இதற்காக முதலமைச்சர் ரங்கசாமியுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளனர். தற்போது பரிசீலனையில் உள்ள 4 பேரும் புதுச்சேரியில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை. அதேநேரத்தில் வெளிமாநில வேட்பாளரை நிறுத்துவதற்கு முதல்-அமைச்சர் ரங்க சாமியும், புதுச்சேரி பா.ஜனதாவினரும் சம்மதிப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    இதனால் பா.ஜனதா வேட்பாளர் தேர்வில் தொடர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    • நிர்வாகம் பரம்ஜித் கவுர் விண்ணப்பத்தை நிராகரித்தது, மேலும் சிங் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
    • பயோமெட்ரிக் கருவியில் பதிந்த அவரது கைரேகைகள் உண்மையான வேட்பாளரின் கைரேகைகளுடன் பொருந்தாததால் சிக்கினார்.

    பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் பகுதியில் உள்ள ஆங்ரேஸ்சிங் என்ற நபர்,சுகாதாரப் பணியாளர்களுக்கான அரசாங்க தேர்வின் போது தனது காதலி போல் வேடம் போட்டு போலியாக நடிக்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார்.

    அதிகாரிகளின் அறிக்கைகளின்படி, "ஆங்ரேஸ்சிங் பெண் வேடத்தில் ஜனவரி 7 ஆம் தேதி கோட்காபுராவின் டிஏவி பப்ளிக் பள்ளியில் தேர்வு எழுத வந்துள்ளார். அதற்காக, மேக்கப், பொட்டு மற்றும் சல்வார் கமீஸ் அணிந்து போலி வாக்காளர் மற்றும் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி தேர்வு எழுத வந்தார்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆவணங்கள் இருந்தபோதிலும், பயோமெட்ரிக் கருவியில் பதிந்த அவரது கைரேகைகள் உண்மையான வேட்பாளரின் கைரேகைகளுடன் பொருந்தாததால் சிங்கின் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.

    முதற்கட்ட விசாரணையில், அவர் தனது காதலி பரம்ஜித் கவுர் என்ற பெண்ணுக்காக போலி ஆவணங்களை பயன்படுத்தி தன்னை பெண்ணாக சித்தரித்து தேர்வு எழுத வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, நிர்வாகம் பரம்ஜித் கவுர் விண்ணப்பத்தை நிராகரித்தது, மேலும் சிங் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    சிங்கின் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் இப்போது கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் என்றும், முழுமையான விசாரணையில் அவரது செயல்களுக்கான கூடுதல் காரணத்தை கண்டறியப்படும் என்றும் எஸ்பி சிங் கூறினார்.

    • நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது.
    • கையெழுத்து இயக்க பெட்டியில் தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    கோட்டக்குப்பத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தி.மு.க. நகர செயலாளரும், கோட்டக் குப்பம் நகர் மன்ற தலை வரு மான எஸ்.எஸ் ஜெயமூர்த்தி தலைமையில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதன் ஒரு பகுதியாக கோட்டகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே 'நீட் விலக்கு நம் இலக்கு' கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடந்தது. இதில் விழுப்புரம் மாவட்ட தி.மு.க. மருத்துவரணி துணை அமைப்பாளர் டாக்டர் வினோபாரதி முன்னிலை யில் மருத்துவம் படிக்கும் மாணவ-மாணவி கள், அரசு பள்ளி மாணவ மாணவிகள் தமிழ்நாட்டில் நீட் விலக்கு வேண்டி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் கையெழுத்து இயக்க பெட்டியில் தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

    • தகுதியான தேர்வர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும்.
    • பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகத்துறையில் உள்ள 2534 தொடக்க நிலை பணிகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அல்லாமல், நகராட்சி நிர்வாகத்துறை மூலமாக நேரடியாக தேந்தெடுக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

    எந்த நோக்கத்திற்காக உள்ளாட்சிகள், பொதுத் துறை அமைப்புகளின் பணியாளர்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டதோ, அதற்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நிலைப்பாடு முறைகேடுகள் நடப்பதற்கே வழிவகுக்கும். அரசுத்துறை, பொதுத்துறை மற்றும் உள்ளாட்சிகளில் வேலைவாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்ட நிலையில், அப்பணிகளுக்கான ஆள்தேர்வு நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட்டு, தகுதியான தேர்வர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும்.

    அதன்படி, நகராட்சி நிர்வாகத்துறைக்கு 2534 பேரை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகவே நடத்த வேண்டும். இந்த பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாதிரி தேர்வானது ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும்.
    • போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்

    திருச்சி

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-4 (டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4) போட்டி தேர்வுக்கான மாதிரி தேர்வு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. மாதிரி தேர்வானது ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும்.

    6 மற்றும் 7-ம் வகுப்பு தமிழ் பழைய மற்றும் புதிய பாட பகுதியில் இருந்து வினாக்கள் இடம் பெறும். தேர்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. தேர்வு காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும்.

    மாணவர்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு, ஓ.எம்.ஆர். விடைத்தாளில் பதில் அளிக்க வேண்டும். போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.

    கந்தர்வகோட்டை வட்டார அளவிலான கலை போட்டியில்

    கந்தர்வகோட்டை 

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில், வட்டார அளவிலான கலைத்திரு விழா போட்டி நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் செளமியா, பல்குரல் போட்டியில் தரணிகா, தனிநடன போட்டியில் கல்பனா, செவ்வியல் நடனம் தனியொரு பிரிவில் ரித்திகா ஆகியோர் முதலிடம் பிடித்து புதுக்கோட்டை மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றனர். களிமண் சுதை வெளி ப்பாடு சிவகார்த்திகேயன், தோல்கருவிகள் கபிலன் ஆகியோர் மூன்றாவது இடமும் பெற்றனர்.நாடக குழுவில் சாலை பாதுகாப்பு என்ற நாடகத்தில் தீபக் தலைமையிலான குழுவில் தீபக்குமார், ஆசியா, தமிழரசன், கிரித்தீஷ், வீரலட்சுமி, ஹரிசேகரன், ஆகியோர் நடித்த நாடகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

    போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் தலைமை ஆசிரியர் தமிழ் செல்வி, ஆசிரியர்கள் மணிமேகலை, நிவின், வெள்ளைச் சாமி, தனலெட்சுமி, கெளரி ஆகி யோர் பாராட்டினார்கள்.

    • அரியலூர் மாவட்டஊர்க்காவல் படைக்கு ஆள்தேர்வு
    • 28 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.

    அரியலூர், 

    அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிப்புரிய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள செய்தி குறிப்பில், ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 27 ஆண்கள், 1 பெண் என மொத்தம் 28 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 28,29,30 ஆகிய தேதிகளில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. இதற்கான தேர்வு அக்டோபர் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்களாக இருக்கலாம். தேர்வு நடைபெறும் நாள்களில் 20 வயது நிறைந்தவராகவும், 45 வயது நிறைவ டையாதவராகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். கல்விச்சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை எடுத்து வர வேண்டும். தற்போது எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 எடுத்து வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • அரியலூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆள் தேர்வு
    • விண்ணப்பிக்க கலெக்டர் ஆனிமேரி சொர்ணா அழைப்பு

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா அறிவித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரூ.12 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிகமாக பள்ளி மேலான்மைக்குழுவின் மூலம் நிரப்படவுள்ள மேற்கண்ட பணியிடத்துக்கு கீழ்காணும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிந்து வருபவர்கள் (இல்லையெனில்). வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி, இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை. பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    கீழ்காணும் பகுதியிலுள்ள அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளிகளில் காலிப்பணியிட விவரம்:

    தா.பழூர்-1, மணக்கால்-2, விளந்தை-1, ஜெயங்கொண்டம்-1, த.கீழவெளி-1, இளையபெருமாள் நல்லூர்-2, வடவீக்கம்-1, வெத்தியார்வெட்டு-2, பாப்பாகுடி-1, கங்கை கொண்டசோழபுரம்-1, கொல்லாபுரம்-1, இளந்தைக்கூடம்-1, தூத்தூர்-1, கீழகொளத்தூர்-1, பூவாணிப்பட்டு-2.

    தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிட விவரம்: இலைக்கடம்பூர்-1, ஜெயங்கொண்டம்-1, வடவீக்கம்-1. விண்ணப்பங்கள் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில்

    நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 29.9.2023 மாலை 5 மணிக்குள் ஒப்படைக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • தேர்வுக்கான வினாத்தாள்கள், லீக் ஆகாமல் இருக்க, உரிய பாதுகாப்பு மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • பள்ளிகளில், தொடர்ச்சியாக ஒருவாரம் விடுப்பு எடுக்கும் மாணவர்களின் நிலையை அறிய, ஆசிரியர்கள் நேரடியாக அவர்களின் குடியிருப்புகளுக்கே சென்று விசாரிக்கின்றனர்.

    திருப்பூர்:

    பொது வினாத்தாள் பாணியில் காலாண்டு தேர்வு நடப்பதால், அனைத்து மாணவர்களையும் கட்டாயம் தேர்வெழுத வைக்க வேண்டுமென, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வருகிற 19-ந் தேதி முதல் 27-ந்தேதி வரை காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனரகத்தில் இருந்து வினாத்தாள் தயாரித்து, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இதை நகலெடுத்து பள்ளிகளுக்கு அனுப்பி தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான வினாத்தாள்கள், லீக் ஆகாமல் இருக்க, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். கொரோனா தொற்றுக்கு பின், கடந்த கல்வியாண்டு முழுமையாக நடந்ததால், மாணவர்களின் கற்றல் திறன் அறிய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    எனவே இத்தேர்வுக்கு அனைத்து மாணவர்களும் கட்டாயம் பங்கேற்க செய்ய வேண்டுமென, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது:-

    பள்ளிகளில், தொடர்ச்சியாக ஒருவாரம் விடுப்பு எடுக்கும் மாணவர்களின் நிலையை அறிய, ஆசிரியர்கள் நேரடியாக அவர்களின் குடியிருப்புகளுக்கே சென்று விசாரிக்கின்றனர்.

    தற்போது தொடர் விடுப்பு எடுப்போர் எண்ணிக்கை, கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும் காலாண்டு தேர்வில், 100 சதவீத வருகைப்பதிவுக்கு உறுதி செய்யுமாறு, தலைமையாசிரியர்களுக்கு சமீபத்தில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு பின் கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நான் முதல்வன் ஊக்கத்தொகைக்கான தேர்வு அரியலூரில் 233 பேர் எழுதினர்
    • 233 பேர் தேர்வெழுதிய நிலையில் 140 பேர் எழுத வரவில்லை

    அரியலூர்,

    மத்திய மற்றும் மாநில பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதவுள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பயன்பெறுவதற்கான தேர்வு அரியலூரில் நடைபெற்றது.தேர்வு எழுதுவதற்காக அரியலூர் மாவட்டத்தில் 373 பேர் பதிவு செய்திருந்தனர். இதையடுத்து அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் 233 பேர் கலந்து கொண்டனர். 140 பேர் எழுத வரவில்லை. அரியலூர் மாவட்ட கலெக்டர்ஆனிமேரி ஸ்வர்ணா தேர்வின்போது ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற வட்டார கல்வி அலுவலருக்கான போட்டித் தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் பூங்கொடி நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • 4 மையங்களில் மொத்தம் 1,308 தேர்வர்கள் தேர்வு எழுத அழைப்பாணை அனுப்பப்பட்டதில், 1098 நபர்கள் தேர்வு எழுதினர். 210 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற வட்டார கல்வி அலுவலருக்கான போட்டித் தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் பூங்கொடி நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

    திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டார கல்வி அலுவலருக்கான போட்டித்தேர்வு இன்று 4 தேர்வு மையங்களில் நடை பெற்றது. திண்டுக்கல்லில் அரசு மகளிர் மேல்நிலை ப்பள்ளி தேர்வு மையத்தில் அமைக்கப்பட்ட 14 தேர்வறை களில் அனுமதிக்க ப்பட்ட 280 தேர்வர்களில் 224 நபர்களும்,

    ஒய்.எம்.ஆர்.பட்டி புனித வளனார் பெண்கள் மேல்நிலை ப்பள்ளி தேர்வு மையத்தில் அமைக்கப்பட்ட 14 தேர்வ றைகளில் அனுமதிக்கப்பட்ட 268 தேர்வர்களில் 231 நபர்க ளும், அண்ணா மலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் அமைக்கப்பட்ட 19 தேர்வறைகளில் அனும திக்கப்பட்ட 380 தேர்வ ர்களில் 324 நபர்களும், பேகம்பூர் அவர்லேடி பெண்கள் மேல்நிலை ப்பள்ளி தேர்வு மையத்தில் அமைக்கப்பட்ட 19 தேர்வறைகளில் அனுமதிக்கப்பட்ட 380 தேர்வர்களில் 319 நபர்களும் என 4 மையங்களில் மொத்தம் 1,308 தேர்வர்கள் தேர்வு எழுத அழைப்பாணை அனுப்பப்பட்டதில், 1098 நபர்கள் தேர்வு எழுதினர். 210 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.

    இந்த தேர்வை கண்காணிக்கும் பணியில் 66 கண்காணிப்பாளர்கள், 8 தலைமை அலுவலர்கள், ஒவ்வொரு மையத்திற்கும் தலா 2 வீடியோ ஒளிப்பதிவாளர்கள், என மொத்தம் 82 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து தேர்வு மையத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    தேர்வர்கள் எவ்வித சிரமமுமின்றி தேர்வு எழுதுவதற்கு வசதியாக காற்றோட்டமான தேர்வு அறைகள், இருக்கை வசதிகள், தடையின்றி மின் வினியோகம், குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மே ற்கொள்ளப்பட்டு எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் தேர்வுக்கான அனைத்து ஏற்பா டுகளும் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது கல்வித்துறை இணை இயக்குநர் ஸ்ரீதேவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாசருதீன் உள்பட அலு வலர்கள் உடனிருந்தனர்.

    ×