லைஃப்ஸ்டைல்

வீட்டிலேயே லிப் பாம் தயாரிப்பது எப்படி

Published On 2018-03-14 05:36 GMT   |   Update On 2018-03-14 05:36 GMT
கெமிக்கல் கலந்த லிப் பாமை பயன்படுத்தும் போது அது உதட்டில் அலர்ஜியை உண்டாகும். இதை தவிர்க்க வீட்டிலேயே லிப் பாம் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
சிலருக்கு அடிக்கடி உதடு வறண்டு போய் கருப்பாக மாற ஆரம்பித்துவிடும். இவற்றைத் தடுக்க எப்போதும் லிப் பாமை கையில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும். உதடு மிகவும் சென்சிடிவ்வான பகுதி என்பதால் கெமிக்கல் அதிகம் இல்லாத லிப் பாமைப் பயன்படுத்துவது நல்லது. இல்லையெனில் உதடுகளில் அலர்ஜி போன்றவை உண்டாகும். உதடு மிக அதிகமான வறட்சியடையும். தோலில் அரிப்பு உண்டாகும். இந்த பிரச்னைகளில் இருந்து விடுபட வேண்டுமானால், வீட்டிலேயே கெமிக்கல் இல்லாத இயற்கையான பொருட்களைக் கொண்டு, லிப் பாம்களைத் தயாரித்துக் கொள்ள முடியும்.

பெட்ரோலியம் ஜெல்லி லிப் பாம்



பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளுக்குப் பயன்படுத்துவது சிறந்தது. அதனால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. பெட்ரொலியம் ஜெல்லியையும் இயற்கையான பொருட்களில் இருந்து எடுக்கப்படும் நிறங்களையும் சேர்த்து, லிப் பாம் செய்ய முடியும்.

6 ஸ்பூன் அளவுக்கு பெட்ரோலியம் ஜெல்லியை எடுத்து மைக்கோவேவ் ஒவனில் பயன்படுத்தும் பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு உங்களுக்குப் பிடித்த ஜூஸை ஊற்றிக் கொள்ள வேண்டும். சில ஸ்ட்ராபெர்ரி அல்லது ஆரஞ்சுப் பழங்களை நன்கு மசித்து அவற்றோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை ஒரு நிமிடத்துக்கு மிதமான வெப்பநிலையில் வைத்து சூடேற்றவும். அதன்பின் ஆறவைத்து, பாட்டிலில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். எப்போதெல்லாம் உதடு வறட்சியாக இருக்கிறதோ அப்போது இந்த பாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Tags:    

Similar News