பொது மருத்துவம்

சளி, இருமலை விரட்டும் கற்பூரவள்ளி

Published On 2024-05-26 10:20 GMT   |   Update On 2024-05-26 10:20 GMT
  • கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
  • கற்பூரவள்ளி செடியின் இலை சாற்றின் சில துளிகளை உள்ளுக்கு அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்கும்.

கற்பூரவள்ளி இலையானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

தோல் அரிப்பு, சொறி போன்றவற்றிற்கு கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, நன்கு கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து, அந்த சாறை குடித்தால் மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும். அந்த இலை சொட்டுகளை தொண்டையில் படுமாறு அருந்த தொண்டைக்கட்டு, வறட்டு இருமல், சளி தொந்தரவுகள் ஆகியவை நீங்கும்.

கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து லேசாக வதக்கி சாறு எடுத்து தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால் மார்புச்சளி குணமடையும்.

கற்பூரவள்ளி செடியின் இலை சாற்றின் சில துளிகளை உள்ளுக்கு அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல் குணமாகும்.

கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கிறது.

தினமும் கற்பூரவள்ளி இலையினை சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும். கற்பூரவள்ளி இலை வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

Tags:    

Similar News