பொது மருத்துவம்

மாம்பழத்தில் இத்தனை நன்மைகளா...!

Published On 2024-05-26 04:12 GMT   |   Update On 2024-05-26 04:12 GMT
  • மாம்பழத்தில் உள்ள அமிலேஸ் மற்றும் புரோட்டீஸ் போன்ற நொதிகள் செரிமானத்தை ஊக்குவிக்கின்றன.
  • மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் இருக்கிறது. கண்களை ஆரோக்கியமாக பராமரிக்கிறது.

இது மாம்பழ சீசன். அதன் தனித்துவமான சுவை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் ருசிக்க வைத்துவிடுகிறது. மாம்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நிரம்பி இருக்கின்றன.

மாம்பழத்தை அப்படியே சாப்பிடத்தான் பலரும் விரும்புவார்கள். மாங்காயை சமையலில் சேர்த்து பல்வேறு ரெசிபிகள் தயாரித்து உட்கொள்பவர்களும் இருக்கிறார்கள். எதனை சாப்பிடுவது சிறந்தது என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது.

பழுத்த மாம்பழங்களில் பீட்டா கரோட்டின் போன்ற சில ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை மாம்பழத்திற்கு ஆரஞ்சு-மஞ்சள் நிறத்தை அளிக்கின்றன. அத்துடன் ஆன்டிஆக்சிடென்டுகள் செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. நாள்பட்ட நோய்களின் ஆபத்தையும் குறைக்கின்றன. கரோட்டினாய்டுகள் வயது தொடர்பான தசை சிதைவை கட்டுப்படுத்துகின்றன.

* மாம்பழத்தில் கலோரிகள் குறைவு. ஆனால் நார்ச்சத்து அதிகம். நார்ச்சத்து உடலை முழுமையாகவும் திருப்தியாகவும் உணர வைக்கும். அதனால் அதிகமாக சாப்பிடும் வாய்ப்பை குறைத்து உடல் எடையை சீராக பராமரிக்க உதவும்.

* மாம்பழத்தில் உள்ள அமிலேஸ் மற்றும் புரோட்டீஸ் போன்ற நொதிகள் செரிமானத்தை ஊக்குவிக்கின்றன. மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கின்றன.

* மாம்பழத்தில் ப்ரீபயாடிக்குகள் நிறைந்துள்ளன. இது குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவாக செயல்படுகிறது. ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் வித்திடுகிறது.

* மாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகள் சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கவும், சரும நிறத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

* மாம்பழங்களில் பொட்டாசியமும் நிறைந்துள்ளது. அது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் வழிவகுக்கிறது.

* மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் இருக்கிறது. கண்களை ஆரோக்கியமாக பராமரிக்கவும், வயது மூப்பு தொடர்பான பார்வை பிரச்சனைகளைத் தடுக்கவும் இது அவசியமானது.

* மாம்பழத்தில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலமும் உள்ளது. இது செரோடோனின் அளவை அதிகரிக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவும்.

* மாம்பழத்தில் குர்செடின், ஐசோகுவர்சிட்ரின் மற்றும் அஸ்ட்ராகலின் போன்ற ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்ற உதவுகின்றன. உடல் எடை குறைவதற்கும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கின்றன.

Tags:    

Similar News