பெண்கள் உலகம்
null

கர்ப்பத்தை உறுதி செய்யும் அறிகுறிகள்- தெரிந்து கொள்வோமா!

Published On 2024-05-26 08:11 GMT   |   Update On 2024-06-05 10:26 GMT
  • சில வாசனைகள் பிடித்தாலும் சில வாசனைகள் குமட்டலை உண்டாக்கும்.
  • நாள் முழுவதும் பசி உணர்வு அதிகரிக்கும். ஆனால் சாப்பிடவும் முடியாது.

கர்ப்பத்தை உறுதி செய்வதற்கு முன்பே சில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

கர்ப்பத்தின் அறிகுறியாக வாசனை உணர்திறன் அதிகமாக இருக்கும். உணவு சமைக்கும்போதும் லேசாக வெளிப்படும் நறுமணம் கூட அதிகமாக உணர முடியும்.

சில வாசனைகள் பிடித்தாலும் சில வாசனைகள் குமட்டலை உண்டாக்கும். ஒரே நாளில் தொடர்ந்து இந்த வாசனை தன்மை இருந்தால் இவை கருத்தரித்ததற்கான அறிகுறிகளில் ஒன்றாகவே சொல்லலாம்.

தினமும் கழிக்கும் சிறுநீர் அளவில் வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டாலும் அதுவும் கருத்தரித்தலுக்கான அறிகுறி தான். பகல் பொழுது மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு அதிகமாக இருக்கும்.

வழக்கத்தை விட அதிகமாக சோர்வு இருந்தால் அதற்கு காரணம் கருத்தரித்தலாக இருக்கலாம்.

நாள் முழுவதும் பசி உணர்வு அதிகரிக்கும். ஆனால் சாப்பிடவும் முடியாது. பார்க்கும் உணவுகள் தவிர மற்ற உணவுகள் சாப்பிட தோன்றும். பிடிக்காத உணவின் மீது ஆசை இருக்கும். பிடித்த உணவின் மீது வெறுப்பு உண்டாகும்.

வயிற்றில் அவ்வபோது ஒருவித வலியை உணர முடியும். இது அசெளகரியத்தை அதிகரிக்க செய்யும். கருப்பையில் கரு தங்க ஆரம்பித்ததும் கர்ப்பப்பை விரிய தொடங்கும். இதனால் தான் அவ்வபோது வயிற்றில் ஒருவித வலியை உணர முடியும்.

இந்த அறிகுறிகள் மாதவிடாய் எதிர்பார்க்கும் நாள் முதலே பலருக்கும் வரக்கூடியதுதான். கருத்தரிக்கிறோம் என்பதை உறுதி செய்யும் முன்பு நம் உடல் அறிந்துவிடும்.

இந்த அறிகுறிகளை உணரும்போது மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.

Tags:    

Similar News