உடற்பயிற்சி

எளிமையாக உடற்பயிற்சி செய்யலாம் வாங்க...

Published On 2024-05-26 07:42 GMT   |   Update On 2024-05-26 07:42 GMT
  • நடக்கும் பாதை வளைந்து வளைந்து செல்லாமல் ஒரே நேர்கோட்டில் அமைய வேண்டும்.
  • கைகளையும், கால்களையும் வீசுவது, உட்கார்ந்து எழுந்திருப்பது போன்ற பயிற்சிகள் பலவீனமான மனிதர்களுக்கும் உறுதியளிக்கக்கூடியவை.

உடற்பயிற்சி கூடத்தில்தான் உடற்பயிற்சிகள் செய்யமுடியும் என்பதில்லை. உடற்பயிற்சி கருவிகள் இன்றி, எளிமையாக கூட உடற்பயிற்சி செய்யலாம். சுறுசுறுப்பாக நீண்ட தூரம் நடக்கலாம். நடக்கும்போது சுவாசத்தை ஆழமாக இழுத்துவிட வேண்டும். ஆனால் முறையாக நடக்க வேண்டும். எப்படி உடலை அசைத்து நடக்க வேண்டுமோ அப்படி அசைத்து, சமமான அடிகள் வைத்து கடைசி வரையில் ஒரே வேகத்துடன் நடப்பது சிறந்த உடற்பயிற்சியாகும். மேலும் நடக்கும் பாதை வளைந்து வளைந்து செல்லாமல் ஒரே நேர்கோட்டில் அமைய வேண்டும்.

 வீட்டிற்குள்ளேயே பயிற்சி பெற பல்வேறு உபகரணங்கள் வந்துவிட்டாலும், அவைகள் இல்லாமல் செய்யும் பயிற்சி சீரான பலனைத்தரும். கைகளையும், கால்களையும் வீசுவது, உட்கார்ந்து எழுந்திருப்பது போன்ற பயிற்சிகள் பலவீனமான மனிதர்களுக்கும் உறுதியளிக்கக்கூடியவை.

படிப்படியாக பயிற்சிகளின் தன்மை, கால அளவு ஆகியவற்றை அதிகரிக்கலாம். அடிவயிற்றை இழுத்து சுவாசத்தை வெளியே விடுவதும் ஒரு சிறந்த பயிற்சியாகும். இது மிகவும் எளிய பயிற்சியாக இருந்தாலும் ஜீரண உறுப்புகளுக்கு நல்ல பயிற்சியாகும். இதன்மூலம் உணவுச்சத்துக்கள் உடலால் நன்கு கிரகிக்கப்பட வாய்ப்பு உண்டு.

Tags:    

Similar News