ஆன்மிகம்

புராணங்களில் குறிப்பிட்டுள்ள பஞ்ச சூரிய ஸ்தலங்கள்

Published On 2018-01-19 05:19 GMT   |   Update On 2018-01-19 05:19 GMT
பஞ்ச பாஸ்கர ஸ்தலம் என்பது சூரியனை மையமாக வைத்து புராணங்களில் குறிப்பிட்டுள்ள ஸ்தலங்களாகும். இந்த ஸ்தலங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
1. ஞாயிறு ஸ்தலம் - சென்னைக்கு அருகில்
2. திருச்சிறுகுடி- நன்னிலம் அருகில்
3. திருமங்களகுடி- ஆடுதுறை அருகில்
4. திருப்பரிதி நியமம்- நீடாமங்கலம் அருகில்
5. தலைஞாயிறு- திருவாரூர் அருகில்

பஞ்ச பாஸ்கர ஸ்தலம் என்பது சூரியனை மையமாக வைத்து புராணங்களில் குறிப்பிட்டுள்ள ஸ்தலங்களாகும். அதில் ஒன்று ஞாயிறு ஸ்தலம். சூரிய பகவான் பூசித்தால் இத்திருநாமம் பூண்டது. வாரங்களில் முதல் நாளை ஞாயிறு என்றும், மாதங்களில் முதல் நாளை ஆதித்ய என்றும் குறிப்பிடுவார்கள். 

முதல் மாதமான சித்திரை முதல் நாளிலிருந்து 7 நாட்களுக்கு ஆதித்தன் அலை கடலெழுந்து தன் ஆயிரம் கிரணங்களால் ஈசன் அம்மை இருவருக்கும் பாதசேவை புரிவது போன்று காலடியில் ஒளியைப் படரவிட்டு இறைவி, இறைவன் இருவரையும் சூரிய பகவான் வணங்குகிறார். ஒவ்வொரு தமிழ்ப் புத்தாண்டு தினத்திலும், தை மாதப் பிறப்பு அன்றும் சிறப்பு சூரிய வழிபாடு நடைபெறுகிறது.

சூரியனுக்கு 12 பெயர்

ஆதித்தன், பாஸ்கரன், ரவி, ஞாயிறு என்று சூரியனுக்கு பலபெயர்கள் உண்டு. ரஸ்மி புராணத்தில் சூரியனுக்கு பன்னிரண்டு பெயர்கள் சொல்லப்பட்டுள்ளது. மித்திரன், ரவி, சூரியன், பானு, ககான், பூஷ்ணன், ஹிரண்யகர்பன், மரீசி, ஆதித்யன், சவித்ரு, அர்க்கன், பாஸ்கரன் என்பவையே அவை.
Tags:    

Similar News