ஆன்மிக களஞ்சியம்

துளசியை வழிபட வேண்டிய காலங்கள்

Published On 2024-05-26 11:30 GMT   |   Update On 2024-05-26 11:31 GMT
  • ஆலயங்களில் தரும் துளசியை அருந்துபவர் சத்யநாராயண பூஜை செய்த பலன்களை பெறுவர்.
  • துளசி கவசத்தை மும்முறை காலை நேரத்தில் கூறி வருபவர்களுக்கு அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

1. அன்றாடம் பெண்களும், ஆண்களும் துளசியை வழிபடலாம்.

2. திருமணமாகாத பெண்கள் பவுர்ணமி மற்றும் துவாதசி திதிகளில் ஆராதனை செய்யலாம்.

3. ஏகாதசியன்று விரதம் இருந்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

4. திருமணமான பெண்கள் ஸ்ரீதுளசி தேவியை வழிபட்டு வந்தால் நன் மக்கட்பேறு அடைவார். கர்ப்பம் தரித்த பெண்களின் அச்சமும் நீங்கும்.

5. துளசி கவசத்தை மும்முறை காலை நேரத்தில் கூறி வருபவர்களுக்கு அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

6. துளசி விரதத்தை ஐப்பசி மாத வளர்பிறை துவாதசியில் தொடங்கி கார்த்திகை மாத வளர்பிறை துவாதசியில் முடிக்க வேண்டும்.

7. வேதவிற்பன்னர் மூலம் அஷ்டாக்ஜரம் புருஷ சூக்தம் முதலியவற்றால் வழிபாடு செய்தால் இஷ்டமான பலன் உடனே கிட்டும்.

8. பெண் மூலிகையாம் துளசியின் அருகில் ஆண் மூலிகையான தொட்டால் சினிங்கி வைத்து வழிபட்டு வந்தால் நோய் நொடியின்றி நீண்ட நாள் வாழலாம். முதியோர்கள் நீண்ட ஆயுளை பெறுவார்கள்.

9. வீடுகளில் பூஜை செய்ய முடியாதவர்கள் ஆலயங்களுக்குச் சென்று திருவிளக்கேற்றி வழிபாடு செய்தால் பலன் முழுவதும் பெறுவர்.

10. ஆலயங்களில் தரும் துளசியை அருந்துபவர் சத்யநாராயண பூஜை செய்த பலன்களை பெறுவர்.

11. மகாவிஷ்ணுவுக்கும், ஸ்ரீ துளசிக்கும் திருமணம் செய்து வைப்பதன் மூலம் அசுவமேத யாகம் செய்த பலனை அடையலாம்.

Tags:    

Similar News