ஆன்மிக களஞ்சியம்

துளசி பூஜை செய்த மகாவிஷ்ணு

Published On 2024-05-26 08:52 GMT   |   Update On 2024-05-26 08:52 GMT
  • தர்மத்துவஜன் மாதவி என்ற தம்பதியினருக்கு கார்த்திகை மாதம் பவுர்ணமி திதியில் துளசி அவதரித்தாள்.
  • ஏகாதசி தினத்தில் விரதம் இருப்பவர்கள் துவாதசி அன்று துளசி தீர்த்தம் அருந்தியே விரதத்தை நிறைவு செய்வார்கள்.

தர்மத்துவஜன் மாதவி என்ற தம்பதியினருக்கு கார்த்திகை மாதம் பவுர்ணமி திதியில் துளசி அவதரித்தாள்.

பிரம்மனை நோக்கி தவம் செய்து வரம் பெற்ற துளசி பெண் வடிவத்தை விட்டு செடி வடிவம் தாங்கி திருமாலுக்கு பிரியமானவளாக விளங்குவதாக புராணங்கள் சொல்லுகின்றன.

துளசி செடியின் அடியில் தேங்கி நிற்கும் தீர்த்தத்தில் பாவங்களை போக்கும் புண்ணியங்களை தரும் சக்தி இருப்பதாக ஐதீகம் உண்டு.

ஹரி வம்சம் என்ற நூல் மகாவிஷ்ணு ஒரு முறை தன்னை மகிழ்விக்கும் துளசியை தான் மகிழ்விக்கும் பொருட்டு துளசி பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது.

கார்த்திகை மாத பவுர்ணமி தினத்தில் திருமால் அந்த பூஜையை செய்ததாகவும் அன்றையதினம் நாமும் செய்தால் துளசி மனம் மகிழ்ந்து வரங்களை கேட்காமலேயே தருவாள் என்று பயன் பெற்றவர்கள் நெஞ்சம் நெகிழ சொல்கிறார்கள்.

நமது முன்னோர்கள் நெருப்பு வடிவான சிவபெருமானுக்கு குளிர்ச்சி தருகின்ற வில்வ பத்திரத்தையும், குளிர் மேகம் போன்ற விஷ்ணுவுக்கு, வெப்பத்தை தரும் துளசி பத்திரத்தையும் பூஜை பொருளாக வைத்திருக்கிறார்கள்.

ஏகாதசி தினத்தில் விரதம் இருப்பவர்கள் துவாதசி அன்று துளசி தீர்த்தம் அருந்தியே விரதத்தை நிறைவு செய்வார்கள்.

தைமாத வெள்ளிக்கிழமையும், மாசி மாத சுக்லபட்ச துவாதசியும், பங்குனி மாத அம்மாவாசை மற்றும் பவுர்ணமி சித்திரை மாத பவுர்ணமி, ஆனி மாத சுக்ல பட்ச தசமி மார்கழி மாத விடியற்காலை நேரம் துளசி தேவியை பூஜை செய்வதற்கு சிறந்த நேரம் என்று முன்னோர்கள் வகுத்து கொடுத்து இருக்கிறார்கள்.

Tags:    

Similar News