ஆன்மிக களஞ்சியம்

மறுபிறவி அறுக்கும் துளசி

Published On 2024-05-26 08:48 GMT   |   Update On 2024-05-26 08:48 GMT
  • சூரியனைக் கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்று பட்டாலே பாவங்களும் நோய்களும் விலகி விடும்.
  • துளசி இலையை தெய்வ பிரசாதமாக உண்பவர்களுக்கு சகல பாவங்களும் தொலைந்து போகும்.

எந்த இடத்தில் துளசி செடி வளர்ந்து இருக்கிறதோ அங்கே மும்மூர்த்திகளுடன் சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள்.

சூரியனைக் கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்று பட்டாலே பாவங்களும் நோய்களும் விலகி விடும்.

துளசி இலையை தெய்வ பிரசாதமாக உண்பவர்களுக்கு சகல பாவங்களும் தொலைந்து போகும்.

எவரது இல்லத்தில் துளசி செடிகள் நிறைய இருக்கிறதோ அந்த இடம் புண்ணியமான திருத்தலமாகும்.

அங்கு அகால மரணம் வியாதி முதலியன ஏற்படாது.

துளசி செடிகளை திருமாலின் அம்சமாக மதித்து பூஜை செய்ய வேண்டும்.

துளசி தளத்தால் திருமாலை அர்ச்சனை செய்து பூஜிப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது.

துளசியை பூஜை செய்ததன் பயனாக சீதைக்கு ராமபிரான் கணவராக கிடைத்தார் என்று துளசி ராமாயணம் கூறுகிறது.

விஷ்ணு பூஜைக்கு பிறகு சந்தன தீர்த்தத்துடன், துளசி தளத்தை பிரசாதமாக பெறுவது பக்தர்களுக்கு ஒப்பானதாகும்.

இதை சரணா அமிர்தம், தீர்த்தப் பிரசாதம், பெருமாள் தீர்த்தம் என்றெல்லாம் சிறப்பித்து கூறுவார்கள்.

இதைப்பற்றி ஆகம நூல் துளசி தளம் கலந்த ஸ்ரீமன் நாராயணனின் ஸ்ரீபாத தீர்த்தத்தை பருகி வருபவர்களுக்கு மறுபிறப்பு இல்லை.

அகால மரணம், உடல், உள்ளம் பற்றிய வியாதிகள் எல்லாமே விலகும் என்கிறது.

Tags:    

Similar News