ஆன்மிக களஞ்சியம்

துளசி சாதாரண செடியல்ல.... இத்தனை மகத்துவங்கள் கொண்டது!

Published On 2024-05-26 09:01 GMT   |   Update On 2024-05-26 09:01 GMT
  • மேலும் இறை நாமத்தை உச்சரித்தவாறே துளசியைப் பறிக்க வேண்டும்.
  • துளசியைப் பறித்து மூன்று நாட்கள் வரை உபயோகப்படுத்தலாம்.

பூஜையின் போது துளசியை சமர்ப்பித்தால் பக்தி அதிகரிக்கும்.

துளசி செடியின் அடியில் ஸ்ரீ கிருஷ்ணரை வைத்துப் பூஜித்தால் மோட்ச சாம்ராஜ்யம் கிட்டும்.

துளசியைப் பூஜிப்பது கங்கா ஸ்நானத்திற்கு சமமானபலனைக் கொடுக்கும்.

கொடும்பாவங்கள் செய்தவன் ஆயினும் அந்திம காலத்தில் துளசி தீர்த்தம் அருந்தி துளசித் தளத்தை தலையில் தரித்து பின் உயிர் நீக்க நேர்ந்தால் கட்டாயம் முக்தி அடைகிறான்.

துளசித் தளம் ஸ்ரீவிஷ்ணுவுக்கு மட்டுமின்றி சிவபெருமானையும் பூஜிக்க ஏற்றது. விநாயகரை துளசியால் பூஜிக்கலாகாது.

விரதத்தில் சிறந்ததாகப் போற்றப்படும் ஏகாதசி விரதத்தன்று உபவாசம் இருப்பவர்கள் ஏழுமுறை துளசி இலையை சாப்பிடலாம்.

மறுநாள் துளசி தீர்த்தம் அருந்தியே விரதத்தை முடிக்க வேண்டும். ஏகாதசி அன்று துளசி செடியை பறிக்கக் கூடாது.

திருவோண நட்சத்திரம் சப்தமி, அஷ்டமி, துவாதசி, சதுர்தசி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, மாலை வேளை, இரவு நேரம், ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களிலும் எண்ணெய் தேய்த்துக் கொண்டும் துளசி பறிப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும் இறை நாமத்தை உச்சரித்தவாறே துளசியைப் பறிக்க வேண்டும்.

துளசியைப் பறித்து மூன்று நாட்கள் வரை உபயோகப்படுத்தலாம்.

துளசி மணி மாலை அணிவதால் உடலை நோய்கள் அண்டாது காக்கும்.

துளசி மணி மாலையால் செய்யப்படும் ஜெபம், பன்மடங்கு பலனைக் கொடுக்கும்.

மூதாதையரின் திதி காரியங்களில் துளசி பயன்படுத்துவதாலும் துளசிச் செடிகளின் நிழல் படும் இடங்களில் செய்வதாலும் பரிபூரண பலன்கள் நமக்கு கிடைக்கிறது.

தானங்கள் செய்யும் போது முழுமையான பலன் தானம் செய்யும் பொருளுடன் துளசித்தளம் சேர்த்துக் கொடுப்பதாலேயே கிடைக்கிறது.

சங்கு, துளசி, சாளக்கிராமம் ஆகிய மூன்றையும் ஒன்றாக வைத்து பூஜிப்பவர்களுக்கு முக்காலமும் உணரும் மகா ஞானி ஆகும் பாக்கியம் கிடைக்கும்.

கார்த்திகை மாதம் சுக்லபட்ச துவாதசி திதி பிருந்தாவன துவாதசி என கர்நாடக மராட்டிய மாநிலங்களில் கொண்டாடுகிறார்கள்.

அன்றுதான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் துளசிக்கும் திருமணம் நடந்ததாக ஐதீகம்.

நெல்லிமரம் விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுவதால் துளசி மாடத்தில் நெல்லி மரக்கொம்பையும், நட்டு வாழை மரதோரணங்களுடன் மாக்கோலமிடடு அலங்கரித்து பூஜை செய்வார்கள்.

நிறையதீபங்கள் ஏற்றி பெண்களுக்குதாம்பூலம் இனிப்பு அளிப்பது வழக்கம்.

எல்லா நலன்களும் தரும் ஸ்ரீ துளசியைப் பூஜித்து நாமும் வெற்றி பெறுவோம்.

Tags:    

Similar News