ஆன்மிக களஞ்சியம்

துளசியை நினைத்தாலே பாவம் போகும்

Published On 2024-05-26 08:40 GMT   |   Update On 2024-05-26 08:40 GMT
  • துளசியை நினைத்தால் பாவம் போக்கும். துளசியைக் காப்பாற்றுபவன் பரமாத்மா ஆகின்றான்.
  • துளசியை வழிபட்டால் ஆயுள் பலம் புகழ், செல்வம், மக்கட்பேறு முதலியன பெருகும்.

துளசி இலை சாறை சூடாக்கி எட்டில் ஒரு பங்கு தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

இதனை ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும்.

பெண்கள் மாத விடாயின் போது துளசி விதைகளை ஒரு ஸ்பூன் நீருடன் அரைத்து அந்த மூன்று நாட்கள் உட்கொண்டால் கருப்பை சுத்தமாகி புத்திரபாக்கியம் கிட்டும்.

பாவம் போக்கும் துளசி மாலை

துளசி தளத்தில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள் அசுவினிதேவர் இருவர் ஆகியோர் வசிக்கின்றனர்.

இலையின் நுனியில் பிரம்மன், மத்தியில் மாயோன் மற்றும் லட்சுமி, சரசுவதி, காயத்ரி, பார்வதி முதலானோர் வசிக்கின்றனர்.

துளசியை நினைத்தால் பாவம் போக்கும். துளசியைக் காப்பாற்றுபவன் பரமாத்மா ஆகின்றான்.

துளசியை வழிபட்டால் ஆயுள் பலம் புகழ், செல்வம், மக்கட்பேறு முதலியன பெருகும்.

துளசி காஸ்ட (கட்டை) மாலையை கழுத்தில் அணிந்தால் பாவங்கள் நீங்கும் துளசி தீர்த்தத்தை பருகினால் பரமபதம் செல்வர்.

Tags:    

Similar News