ஆன்மிக களஞ்சியம்

துளசி மாடத்தை வணங்கும் போது சொல்லவேண்டிய பிரார்த்தனைகள்

Published On 2024-05-26 12:00 GMT   |   Update On 2024-05-26 12:00 GMT
  • நீங்கள் துளசி மாடத்தை வணங்குபவராக இருந்தால் கீழ்கண்ட பிரார்த்தனையை மனதில் பக்தியுடன் சொல்லுங்கள்
  • புருஷோத்தமன் ஸ்ரீமன் நாராயணணுக்கு பிரியமானவளே, சகலமும் அறிந்தவளே. உன்னை வணங்குகின்றேன்.

நீங்கள் துளசி மாடத்தை வணங்குபவராக இருந்தால் கீழ்கண்ட பிரார்த்தனையை மனதில் பக்தியுடன் சொல்லுங்கள்:

விஷ்ணுவின் மனதில் இருப்பவளும், அமரர்களால் துதிக்கப்பட்டவளும், மனம், வாக்கு, சர்வ இந்திரியங்களால் பரிசுத்தமானவளுமான துளசி தேவியை வணங்குகிறேன்.

பத்மநாபனுக்கு பிரியமானவளும், பிரம்ம தேவனால் பூஜிக்கத் தகுந்தவளும், தாமரை மலர் போன்ற விசாலமான கண்களை உடையவளும் ஆன துளசி தேவியே!

எனக்கு வரத்தையும், அபயத்தையும் கொடுத்து அருள் செய்.

திவ்யமான ரூபத்தை தரித்தவரும், திவ்யமான ஆபரணங்களை கொண்டவளும், தாமரை போன்ற புன்சிரிப்புடன் கூடிய வதனத்தை உடையவளுமான துளசியே!

உன் நான்கு திருக்கரங்களாலும் அருள் தருவாயாக!

துளசி மாதாவாகிய உனக்குள் சகல தேவதைகளும், எப்போதும் வாசம் செய்வதால் உன்னை அர்ச்சிப்பதால் எல்லா தேவதைகளும் வழிபட்டவர்களாக ஆகிறார்கள்.

உன்னை பூஜிப்பது சகல தேவதைகளையும், பூஜிப்பதற்கு சமம் என்பது எனது கருத்து.

புருஷோத்தமன் ஸ்ரீமன் நாராயணணுக்கு பிரியமானவளே, சகலமும் அறிந்தவளே. உன்னை வணங்குகின்றேன்.

சகல செல்வங்களையும் அருளும் தேவியே என்னை எல்லா பாவங்களில் இருந்தும் காப்பாயாக!

Tags:    

Similar News