ஆன்மிக களஞ்சியம்

எமபயம் போக்கும் துளசி வளர்ப்பு

Published On 2024-05-26 08:57 GMT   |   Update On 2024-05-26 08:57 GMT
  • இல்லங்களில் துளசியை வளர்த்து பூஜிப்பதால் அந்த இல்லமே செழிப்படையும் என்பது ஐதீகம்.
  • எந்த இல்லத்தில் துளசி இருக்கிறாளோ, அந்த இல்லத்தை துர்சக்திகள் அண்டாது.

இல்லங்களில் துளசியை வளர்த்து பூஜிப்பதால் அந்த இல்லமே செழிப்படையும் என்பது ஐதீகம்.

துளசியின் மஞ்சரியை ஸ்ரீ கிருஷ்ணருக்கு சமர்ப்பித்தவர் எல்லாவித பூக்களையும் சமர்ப்பித்த பலனை அடைவார்கள் என்று ஸ்ரீ பத்ம புராணம் கூறுகிறது.

துளசி இலை ஹரியின் பூஜையில் சேர்க்கப்படாவிட்டால் அந்த பூஜையின் பலன் முழுமையாக நமக்கு கிடைப்பதில்லை.

மேலும் நிவேதனத்தின் போதும் துளசியின் ஸ்பரிசம் இருந்தால் மட்டுமே அந்த நிவேதனத்தை இறைவன் ஏற்கிறார்.

ஆகவே துளசி தீர்த்தத்தால் மட்டுமே நிவேதனம் செய்ய வேண்டும்.

துளசி இலையின் நுனியில் பிரம்மாவும், மத்தியில் விஷ்ணுவும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் இரு அசுவினி தேவர்களும், எட்டு வசுக்களும், பதினோருருத்திரர்களும், பன்னிரண்டு ஆதித்தியர்களும் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.

ஸ்ரீ கிருஷ்ணரை துளசியால் அர்ச்சனை செய்பவர் தம் முன்னோர்களையும் பிறவித்தளையிலிருந்து விடுவிக்கிறார்.

துளசி நிறைந்த காட்டுக்குள் பிரவேசிப்பவரது பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி ஆகிறது.

எந்த இல்லத்தில் துளசி இருக்கிறாளோ, அந்த இல்லத்தை துர்சக்திகள் அண்டாது.

அதனால்தான் வீட்டு முற்றத்தில் துளசி வளர்க்கும் மரபு உண்டாக்கியது.

மேலும் அந்த இல்லத்தில் வசிப்பவர்களுக்கு எம பயம் கிடையாது.

துளசியை வளர்த்து தரிசித்து பூஜிப்பதால் மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றாலும் செய்த பாவங்கள் தொலையும்.  

Tags:    

Similar News