ஆன்மிகம்

சாமி சிலைகளை தலையில் சுமந்து வழிபாடு

Published On 2017-07-31 08:50 GMT   |   Update On 2017-07-31 08:51 GMT
ரேணுகாம்பாள் கோவிலில் பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற சாமி சிலைகளை தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
மாரியம்மனின் மறு அவதாரமான ரேணுகாம்பாள் கோவில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த படவேட்டில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

இதில் பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற சாமி சிலைகளை தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு ரேணுகாம்பாள் வேண்டிய வரங்களை வழங்குகிறாள்.

வேலூர்-திருவண்ணாமலை சாலையில் இருந்து 32-வது கிலோ மீட்டரில் சந்தவாசல் சந்திப்பு சாலையில் இருந்து 6 கிலோமீட்டர் மேற்கு திசையில் கோவில் அமைந்துள்ளது.
Tags:    

Similar News