ஆன்மிக களஞ்சியம்

கோவை பிரத்யங்கரா தேவி மிளகாய் யாகம்..... கண்கள் எரியாத அதிசயம்.....

Published On 2024-05-06 16:52 IST   |   Update On 2024-05-06 16:52:00 IST
  • சன்னதிக்கு உள்ளே அனைத்து பக்க சுவர்களிலும் பல கதைகளை ஓவியமாக வரைந்து உள்ளார்கள்.
  • அங்கு பிரத்யங்கரா தேவிக்கு துணையாக அறுபத்தி நான்கு பைரவர்கள் எட்டு பிரிவாக வகுத்திருக்கிறாகள்..

கோவைக்கு அருகில் சிங்காநல்லூரில் சரபேஸ்வரார் - பிரத்யங்கரா தேவி கோவில் ஒன்று சிறப்பாக அமைந்துள்ளது.

ஆலயத்தில் ஒவ்வொரு மாத அமாவாசை தினத்தன்றும் காலை பத்து மணி முதல் பகல் ஒரு மணிவரை தேவிக்கு செய்யப்படும் நிகும்பலா யாகம் எனப்படும் யாகத்தில் மூட்டை மூடையாக சிவப்பு மிளகாயை யாகத் தீயில் கொட்டி யாகம் நடைபெறுகின்றது.

தேவியின் சக்தியை காட்டும் அதிசயம் தீயில் போடப்படும் மிளகாய் எந்த விதமான நெடியையும் ஏற்படுத்துவதும் இல்லை,

எவருடைய கண்களும் எரிவதும் இல்லாத அதிசயத்தை உலகில் வேறு எங்குமே காண முடியாது.

ஆலயத்துக்குள் அமர்ந்து உள்ள பிரத்தியங்கா தேவி நான்கு சிங்கங்கள் பூட்டப்பட்ட ரதத்தில் அமர்ந்தவாறு எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள். முகம் சிங்கத்தினுடயது .

கழுத்திலோ மனித கபாலத்தில் கோர்த்த மாலைகள்.

தலை மீது படம் எடுத்து ஆடும் எழு தலை நாகம். பயங்கரமான தோற்றம். பிரத்தியுங்கரா தேவி அதர்வண வேதத்தின் அதிபதி.

சன்னதியின் நுழை வாயிலில் அவளுக்கு வலதுபுறம் மிகப் பெரிய சரபேஸ்வரர் மற்றும் அகஸ்தியர், இடது புறம் இரண்டு ரிஷிகளான பிரத்தியங்கரா மற்றும் அங்கீரசா போன்றவர்கள் என அவர்களின் உருவம் அந்த சுவற்றில் பதிக்கப்பட்டு உள்ள தாமிரத் தட்டில் காணப்படுகின்றது.

சன்னதிக்கு உள்ளே அனைத்து பக்க சுவர்களிலும் பல கதைகளை ஓவியமாக வரைந்து உள்ளார்கள்.

அங்கு பிரத்யங்கரா தேவிக்கு துணையாக அறுபத்தி நான்கு பைரவர்கள் எட்டு பிரிவாக வகுத்திருக்கிறாகள்..

ஓவியங்களில் பைரவர் அன்னம், மாடு, மயில், இரண்டு விதமான நாய்கள், கழுகு, குதிரை, யானை மற்றும் கழுதை போன்ற வாகனங்களுடன் காட்சி தருகிறார்.

ஆலயத்தில் அர்ச்சனைகள் செய்யப்படுவது இல்லை. தேவிக்கு பூஜை மட்டுமே செய்யப்படுகின்றது.

ஆலய சன்னதிகள் முழுவதும் மேல் கூரையில் உத்ராக்ஷ மணிகளினால் ஆன மாலைகள் பந்தல் போடப்பட்டு உள்ளதைப் போல தொங்க விடப்பட்டு உள்ளன என்பதனால் அங்கு யாரும் தீபம் எற்றுவதையோ, கற்பூரம் கொளுத்துவதையோ அனுமதிப்பதும் இல்லை.

ஆலய தல விருஷத்தில் ஐந்து விதமான இலைகளைக் கொண்ட அரச மரம் உள்ளது.

ஆலயத்தின் எட்டு திக்குகளிலும் மயானம் உள்ளது.

இரவில் ஆலயத்துக்குள் எவருமே தங்க அனுமதிப்பது இல்லை.

இங்கு வந்து இந்த தேவியை வணகுவதின் மூலம் ஏவல், பில்லி, சூனிய வைப்புக்கள் போன்றவை விலகுகின்றன. -நமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறுகின்றன. -பூர்வ ஜென்ம பாபங்கள் விலகுகின்றன.

நமக்கு தொல்லை தருபவர்களின் எண்ணம் நிறைவேறாது.

Tags:    

Similar News