ஆன்மிக களஞ்சியம்

பைரவரின் பத்தினி பைரவி

Published On 2024-05-06 11:26 GMT   |   Update On 2024-05-06 11:26 GMT
  • ஒன்றை விரும்பி ஒன்றை வெறுப்பது என்ற எண்ணம் இருந்தால் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது.
  • எல்லாவற்றிலும் சரி, சமத்துவமான பாவம் ஏற்பட்டால் தான் ஞானத்தை அடைய முடியும்.

சிவலீலைகளில் ஒன்று அந்தகன் என்ற அரசுனை பைரவ மூர்த்தியாக சிவபெருமான் வதம் செய்தது.

சிவபெருமான் பைரவரை அழைத்து அந்தகனுக்கு அந்திய காலத்தை கொடுக்கும் ரகசியத்தை சொல்லி அனுப்பினார்.

பைரவர் அந்தகனை சம்ஹரித்துத் திரும்பி வருகிறார். பைரவரின் பத்னியாதலால் பைரவி என்ற பெயரும் உண்டு.

மங்கள் ரூபிணி :

ஒன்றை விரும்பி ஒன்றை வெறுப்பது என்ற எண்ணம் இருந்தால் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது.

எல்லாவற்றிலும் சரி, சமத்துவமான பாவம் ஏற்பட்டால் தான் ஞானத்தை அடைய முடியும்.

காளியை தாமஸீ என்கிறது தேவி மகாத்மியம்.

மோட்சம் என்பது இவளது கிருபையாலேதான் கிடைக்கிறது.

மோட்சம் அடைவது என்றால் ஏதோ இறந்த பின்பு கிடைப்பது என்பதில்லை.

இவள் அருள் இருந்தால் உயிருள்ளபோதே மோட்ச நிலை கிடைக்கும்.

இதற்கு "உன்மனீ நிலை" என்பர்.

பிரத்தியங்கிராவின் தயவு இருந்தால் இத்தகைய உன்மனீ நிலை எளிதில் ஏற்படும்.

Tags:    

Similar News