சினிமா

‘மெர்சல்’ படத்திற்கு எதிரான தடைகள் முற்றிலுமாக நீக்கம்

Published On 2017-10-13 07:16 GMT   |   Update On 2017-10-13 07:16 GMT
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் படம் ‘மெர்சல்’. இதில் விஜய் ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார். அட்லி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

இந்நிலையில் ‘மெர்சல்’ படத்திற்கென வர்த்தக்குறி பெறப்பட்டது. இதனால் மெர்சல் என்ற பெயரை மற்றவர்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து ‘மெர்சல்’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் கடந்த 2014ம் ஆண்டு அவரது படத்திற்கு ‘மெர்சலாயிட்டேன்’ என்று தலைப்பு வைத்திருப்பதாகவும், ‘மெர்சல்’ படத்திற்கு தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வர்த்தககுறியீடு (டிரெட் மார்க்) பெற்றுள்ளதால் `மெர்சலாயிட்டேன்' படத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதில் கூறியிருந்தார்.



இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அக்டோபர் 6-ஆம் தேதி வரை ‘மெர்சல்’ தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டனர். இதையடுத்து ‘மெர்சல்’ படத்தின் பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து ராஜேந்திரன் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டதால் ‘மெர்சல்’ படத்திற்கு இருந்த தடை முற்றிலுமாக நீங்கியிருக்கிறது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags:    

Similar News