சினிமா

ஆண்களை சார்ந்திருக்கும் காலம் மாறிவிட்டது: ‘தரமணி’ படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு

Published On 2017-08-12 10:07 GMT   |   Update On 2017-08-12 10:07 GMT
ஆண்களை சார்ந்திருக்கும் காலம் மாறிவிட்டது என்பது உள்ளிட்ட பல கருத்துக்களுடன் ‘தரமணி’ படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா, புதுமுக நாயகன் வசந்த் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தரமணி’.

இந்த படத்தின் கதாநாயகி ஆண்ட்ரியா தனது அனுபவம் பற்றி கூறுகையில்...

“ ‘தரமணி’ படத்தில் எனது கதாபாத்திரம் இவ்வளவு துணிச்சலாக இருக்கும் என முதலில் நான் நினைக்கவில்லை. மக்களின் வரவேற்பையும் கருத்துக்களையும் பார்க்கும்பொழுது, நான் எதிர்பார்த்ததை விட மிக சிறந்த கதாபாத்திரமாக இது தோன்றுகிறது. எனது சொந்த உடல் மொழியையும் யதார்த்த நடிப்பையும் வெளிப்படுத்த இயக்குனர் ராம் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். ‘தரமணி’ படத்திற்கு மனதளவில் நிறைய உழைப்பு தேவைப்பட்டது.



எனது கலை திறமையையும், நேரத்தையும் மதிப்பவர்களோடு பணிபுரிவதே எனக்கு பிடிக்கும். ராம் சாரின் படம் பற்றிய அவரது அணுகுமுறையும் மிகவும் யதார்த்தமாக காட்சியமைக்கும் முறையும் எனக்கு பிடித்திருந்தது.

பெண்கள் ஆண்களுக்கு எல்லாவிதத்திலும் சமம் என்பது நிரூபணமாகி வரும் காலம் இது. ஆணை போல் ஒரு பெண்ணும் ஒரு வேலைக்கு போய், சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆண்களை சார்ந்து வாழும் நிலை மாறி ,பெண்கள் தங்களது அன்றாட தேவைகளை தாங்களே பூர்த்திசெய்துகொள்ளும் அளவிற்கு உயர்ந்துள்ளதால் ஆண்களின் ஈகோ பாதிக்கப்பட்டிருக்கிறது. நான் நம்பும் எனது இந்த சொந்த கருத்துக்கள் தான் ‘தரமணி’ படத்தின் கதை. இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என்றார்.

Tags:    

Similar News