சினிமா

ரஜினி - கமல், அரசியலுக்கு தகுதியானவர் யார்? - வாக்கெடுப்பில் பரபரப்பு தகவல்

Published On 2017-07-21 06:11 GMT   |   Update On 2017-07-21 06:11 GMT
அரசியலுக்கு தகுதியானவர் யார் என்று பிரபல நாளிதழ் ஒன்று நடத்திய வாக்கெடுப்பில் பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக அரசியல் களம் பரபரப்பான திருப்பங்களை சந்தித்து வருகிறது. அ.தி.மு.க இரண்டாக பிளந்து இரட்டை இலை சின்னமும் முடங்கிப்போய் கிடக்கிறது. தி.மு.க தலைவர் கருணாநிதியும் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

இந்நிலையில், மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் திரட்டி தமிழக அரசியலை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்லும் தலைவராக யார் வரப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவர் மனதிலும் கேள்வியாக நிற்கிறது.

அதற்கேற்றாற் போல் நடிகர் ரஜினிகாந்தும் சமீபத்தில் அரசியலுக்கு வருவது போல் சூசகமாக கூறியிருக்கிறார். மற்றொரு திருப்பமாக கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் பற்றியும் பேச்சுகள் தற்போது அடிபட தொடங்கிவிட்டன. முன்பை விட ஆட்சியாளர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அரசியல் வட்டாரத்தை கமல் பரபரப்பாக்கி வருகிறார். கமல்ஹாசனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும், திரையுலகினரும் ஆதரவு குரல் எழுப்பி வருகிறார்கள்.

மேலும் தி.மு.க-வின் சொந்த நாளிதழான முரசொலி பவள விழா நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் பங்கேற்க உள்ளார். இது அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. 

இந்நிலையில், பிரபல தனியார் நாளிதழ் ஒன்று அரசியல் களத்திற்கு தகுதியானவர் யார்? என்று ஓட்டெடுப்பு ஒன்றை நடத்தியது. அதில் 53 சதவீதத்தினர் கமலுக்கு ஆதரவு தெரிவித்தும், 47 சதவீதம் பேர் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்தும் தங்களது விருப்பத்தை பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News