சினிமா செய்திகள்

பிக் பாஸ் ஓடிடி 3ன் தொகுப்பாளராக களமிறங்கும் பிரபல நடிகர்

Published On 2024-05-23 04:13 GMT   |   Update On 2024-05-23 04:13 GMT
  • பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
  • இந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாக் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சல்மான் கான் வசிக்கும் மும்பை பாந்த்ரா வீட்டின் முன்பு மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால், பாதுகாப்பு காரணமாக இந்தி பிக்பாஸ் ஓடிடி 3 வது சீசன் ரத்து செய்யப்படுவதாக முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது. 

இந்நிலையில், பிக் பாஸ் ஓடிடி-ன் மூன்றாவது சீசனை சல்மான் கான் தொகுத்து வழங்க மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக, பிரபல எக்ஸ் பக்கமான 'தி காப்ரி' பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அனில் கபூர் பிக் பாஸ் ஓடிடி 3-ஐ தொகுத்து வழங்குவார் என பதிவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, பிக் பாஸ் ஓடிடி-ன் முதல் சீசனை கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News