செய்திகள்

5 மாநில தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

Published On 2018-12-12 17:06 GMT   |   Update On 2018-12-12 17:06 GMT
கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி, ஐந்து மாநில தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். #EdappadiPalaniswami
கோவை:

கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று செய்தியார்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கஜா புயல் பாதிப்பு குறித்த அறிக்கை ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிவாரண நிதியாக மத்திய அரசு எவ்வளவு தருவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

காவிரி வழக்கில் இதுவரை உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கர்நாடக அரசு மதித்ததாக வரலாறு இல்லை.

கர்நாடக அரசு கபினி, ஹேமாவதி போன்ற அணைகளை கட்டியதால் தமிழகம் பாலைவனமாக திகழ்கிறது. மேலும் மேகதாது அணை கட்டி தண்ணீரை தேக்கினால் தமிழகத்திற்கு எப்படி நீர் கிடைக்கும்?

காவிரி நீரை நம்பி தமிழகத்தில் 20 மாவட்டங்கள் உள்ளன. 3 அணைகளில் போதிய நீர் இருந்தும் தரமறுத்த கர்நாடகா மேலும் அணை கட்டினால் எப்படி தண்ணீர் கிடைக்கும்? கர்நாடக அணை கட்டும்போது ஒவ்வொரு முறையும் தமிழகம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை கழக ஆட்சிகள் தான் மேலோங்கி இருக்கும். ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami 
Tags:    

Similar News