search icon
என் மலர்tooltip icon

    ஆப்கானிஸ்தான்

    • ஐ.நா.வின் இந்த அமைப்பில் பெண்களே முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.
    • தலிபான்களின் இந்த முடிவை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.

    காபூல்:

    கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் ஆப்கானிஸ்தானுக்கு ஐ.நா., மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. ஐ.நா.வின் இந்த அமைப்பில் பெண்களே முக்கிய அங்கம் வகிக்கின்றனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் ஐ.நா. அமைப்பில் பணிபுரிய தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இதை ஐ.நா. சபை உறுதி செய்துள்ளது.

    இது குறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐ.நா. அமைப்பில் ஆப்கான் பெண்கள் பணிபுரிய தலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அவர்கள் எழுத்துப்பூர்வமாக அறிவிக்காமல், வாய்மொழியாக அறிவித்துள்ளனர். தலிபான்களின் இந்த முடிவை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. பெண் ஊழியர்கள் இல்லாமல் மருத்துவத் துறை சார்ந்த இங்குள்ள உயிர் காக்கும் கருவிகளை இயக்க முடியாது" என கூறப்பட்டுள்ளது.

    • ஆப்கானிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவானது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 5.49 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • ஆப்கானிஸ்தான் போரில் வெடிக்காத குண்டுகளால் 700 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
    • மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணி வெடிகளில் சிக்கி அவர்கள் உயிரிழக்கின்றனர்

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான போரில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து தலிபான்கள் தலைமையில் அரசு நடந்து வருகிறது. பல புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.

    போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டில் வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றால் மக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். புதிய அரசின் கட்டுப்பாடுகளும் அவர்களை இன்னலுக்கு ஆளாக்கி இருக்கின்றன.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான யூனிசெப் அமைப்பு டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், 2022-ம் ஆண்டில் போரில் பயன்படுத்தப்பட்டு வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகள், வெடிபொருட்கள் ஆகியவற்றால் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என வேதனை தெரிவித்துள்ளது.

    கடந்த வாரம், அந்நாட்டில் வெடிக்காத குண்டுகளால் 8 பேர் உயிரிழந்தனர். அவற்றை எடுத்து அவர்கள் விளையாடியபோதும், உலோகத் துண்டுகளை எடுத்து விற்பதற்காக சேகரித்தபோதும் இச்சம்பவம் நடந்துள்ளது என தெரிவித்துள்ளது.

    பொதுமக்களுக்கும் இதுபற்றிய போதிய விவரங்கள் தெரிவதில்லை. நில கண்ணிவெடிகள், வெடிக்காத பீரங்கி குண்டுகள், வெடிகுண்டுகள் மற்றும் அதுபோன்ற பிற ஆயுதங்களால், நாட்டில் குழந்தைகள் உள்பட பலர் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.

    • ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே தாக்குதல் நடந்தது.
    • இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான்களின் போட்டி அமைப்பான கொராசன் மாகாண ஐ.எஸ். அமைப்பானது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபூலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் உள்ளது. மாலிக் அசார் சதுக்கம் அருகே அமைந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகம் நோக்கி உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு பயங்கரவாதி வந்துள்ளார்.

    அந்த நபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வருவதை அறிந்த பாதுகாப்புப் படையினர் அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை பயங்கரவாதி வெடிக்கச் செய்தார்.

    இந்த தற்கொலைப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், பாதுகாப்புப் படையினர் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
    • வட மாநிலங்களில் நில நடுக்க பீதியில் மக்கள் இரவு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக கொண்டு நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பகுதி பாகிஸ்தான் எல்லையில் உள்ளது.

    இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 புள்ளிகளாக பதிவானது. 188 கிலோ மீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    நில நடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து அதனை சுற்றி 1000 கி.மீ. வரை அதிர்வு ஏற்பட்டது. இதில் பாகிஸ்தானில் கடுமையாக நில நடுக்கம் உண்டானது.

    ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    நில நடுக்கத்தால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் வீடுகள் இடிந்து விழுந்தன. ஆப்கானிஸ்தானை விட பாகிஸ்தானில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத், பெஷாவர், லாகூர், ராவல் பிண்டி உள்ளிட்ட நகரங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டன.

    பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்தன.

    சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் 13 பேர் பலியாகி உள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தானில் 11 பேரும், ஆப்கானிஸ்தானில் 2 பேரும் உயிரிழந்தனர்.

    பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கில் மட்டும் 9 பேர் இறந்தனர். அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பாகிஸ்தானில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு வர கிறார்கள். மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.

    ஆப்கானிஸ்தாலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அனைத்து சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் இருக்கும்படி தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நில நடுக்கம் சுமார் 2 நிமிடங்கள் நீடித்ததால் மக்கள் பீதியில் உறைந்தனர். நில நடுக்கம் நின்ற பிறகும் வீடுகளுக்குள் செல்லாமல் சாலைகளிலேயே இரவு முழுவதும் அமர்ந்து இருந்தனர்.

    ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் அண்டை நாடுகளான இந்தியாவின் வட மாநிலங்கள் மற்றும் சீனா, உஸ்பெஸ்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கிரிகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது.

    இந்தியாவில் டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், காஷ்மீர், இமாச்சலபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நில நடுக்கம் ஏற்பட்டது.

    டெல்லி போன்ற இடங்களில் ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளிகளாக நில நடுக்கம் பதிவானது. இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    மக்கள் பீதியுடன் இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதே போல் பல வட மாநிலங்களில் நில நடுக்க பீதியில் மக்கள் இரவு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் வட மாநிலங்களில் நேற்று இரவு பரபரப்பு நிலவியது.

    வட மாநிலங்களில் நில நடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை.

    • 50 சதவீத செய்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • கடந்தாண்டில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக 200 வழக்குகள் பதிவானதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டிருந்தது.

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பெண்களுக்கு எதிராக தலிபான்கள் கொண்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு பிறகு 53 சதவீத பத்திரிகையாளர்கள் வேலை இழந்துள்ளதாக அந்நாட்டின் பத்திரிகையாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

    மேலும் 50 சதவீத செய்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக 200 வழக்குகள் பதிவானதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தாகார் மாகாணத்தில் உள்ள சக்அப் என்ற இடத்தில் இருந்து அன்ஜீர் பகுதிக்கு நிலக்கரி சுரங்க தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது.

    அந்த பஸ் வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி 17 பேர் இறந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 7 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    • தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
    • மகளிர் தினத்தன்று அங்குள்ள செய்தி ஊடகத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அதன்பிறகு அங்கு பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சுமார் 75 சதவீத பெண் பத்திரிக்கையாளர்கள் தங்கள் வேலையை இழந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த டோலோ நியூஸ் என்ற செய்தி ஊடகத்தில், மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மட்டுமே பங்கேற்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிகழ்ச்சியை ஊடகவியலாளர் சோனியா நியாஸி தொகுத்து வழங்கினார். இதில் பங்கேற்று பேசிய செய்தியாளர் அஸ்மா கோக்யானி, இஸ்லாம் மதத்தின் பார்வையில் பெண்கள் கல்வி பெறுவதற்கும், வேலைக்குச் செல்வதற்கும் அனைத்து உரிமைகளும் உள்ளன என்று தெரிவித்தார்.

    முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியர் ஸாகிரா நபில் பேசியபோது, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்த சமூகத்தில் பெண்கள் இருக்கிறார்கள். ஒரு பெண்ணால் பள்ளியில் கல்வி கற்க முடியாவிட்டால், அவள் வீட்டிலேயே கல்வி கற்றுக் கொள்வாள் என்று கூறினார்.

    சுமார் 50 நிமிடங்கள் ஒளிபரப்பான இந்த விவாத நிகழ்ச்சியில் பெண்களுக்கான உரிமைகள், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய டோலோ நியூஸ் செய்தி ஊடகத்திற்கு சமூக வலைதளங்களில் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • தலிபான் ஆட்சிக்கு வந்தபிறகு கொல்லப்பட்ட மூத்த தலிபான் அதிகாரி முகமது தாவூத் முஜமில்
    • நங்கர்ஹரின் ஆளுநராக பதவியில் இருந்தபோது ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரை வழிநடத்தினார்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபின் வன்முறைகள் குறைந்த போதிலும், ஐஎஸ் பயங்கரவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன. தலிபான் ஆதரவு அதிகாரிகளை குறிவைத்து ஐஎஸ் அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்துகின்றனர்.

    இந்நிலையில், பால்க் மாகாணத்தின் ஆளுநர் அலுவலகத்தில் ஐஎஸ் அமைப்பின் தற்கொலைப்படை பயங்கரவாதி புகுந்து தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்த கொடூர தாக்குதலில் ஆளுநர் முகமது தாவூத் முஜமில் கொல்லப்பட்டார். அவருடன் மேலும் இருவர் பலியாகியுள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர்.

    தலிபான் ஆட்சிக்கு வந்தபிறகு கொல்லப்பட்ட மூத்த தலிபான் அதிகாரி முகமது தாவூத் முஜமில் ஆவார். இவர் இதற்கு முன்பு கிழக்கு மாகாணமான நங்கர்ஹரின் ஆளுநராக பதவியில் இருந்தபோது ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரை வழிநடத்தினார். கடந்த அக்டோபர் மாதம் அவர் பால்க் மாகாணத்திற்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
    • தலிபான் ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை என ஆப்கான் பெண்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது விவாகரத்துக்கு உள்ளான பெண்களை மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர். இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

    இருந்த போதிலும் கட்டாயப்படுத்தப்பட்டு விவாகரத்து பெற்ற கணவருடன் வாழும் பெண்கள் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப் படுவதாகவும். அவர்கள் பற்கள் உடைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாலும் தங்களுக்கு தலிபான் ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை என ஆப்கான் பெண்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    • ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் 4.1 ரிக்டர் அளவில் பதிவானது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 2.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • அந்த நிலநடுக்கம் 4.0 ரிக்டர் அளவில் பதிவானது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.0 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

    ஏற்கனவே, ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ×