search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    விற்பனை குறைவு ஆனாலும் லாபம் குறையாது - இது ஆப்பிள் கணக்கு
    X

    விற்பனை குறைவு ஆனாலும் லாபம் குறையாது - இது ஆப்பிள் கணக்கு

    ஆப்பிள் நிறுவனத்தின் காலாண்டு விற்பனை அறிக்கையில் சந்தை எதிர்பார்ப்புகளை தவற விட்டிருந்தாலும், கணிசமான லாபம் ஈட்டியிருக்கிறது. #AppleEarnings


    ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய காலாண்டு விற்பனை அறிக்கை வெளியாகியுள்ளது. எதிர்பார்க்கப்பட்ட அளவு ஐபோன் விற்பனை இல்லை என்றாலும், அதிக விலை கொண்ட மாடல்களால் ஆப்பிள் லாபம் அதிகளவு பாதிக்கப்படவில்லை. 

    ஜூன் மாதம் வரையிலான காலாண்டு நிலவரப்படி ஆப்பிள் நிறுவனம் மொத்தம் 4.13 கோடி ஐபோன்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டை விட வெறும் 1% மட்டுமே அதிகம் ஆகும். சராசரியாக ஐபோன் விற்பனை கட்டணம் எதிர்பார்க்கப்பட்ட 694 டாலர்களை விட அதிகமாக இருந்தது. அந்த வகையில் ஐபோன் சராசரி விற்பனை விலை 724 டாலர்களாக இருந்தன.

    இந்த காலாண்டிலும் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக ஐபோன் X இருந்தது என ஆப்பிள் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் X மாடலை 999 டாலர்கள் விலையில் அறிமுகம் செய்தது. அதிக விலை காரணமாக ஆப்பிள் லாபத்தை இந்த மாடல் அதிகம் பாதிக்காமல் பார்த்து கொண்டது. 



    இதுதவிர ஆப்பிள் சேவைகளான ஆப் ஸ்டோர், ஆப்பிள் மியூசிக் மற்றும் ஆப்பிள் பே உள்ளிட்டவை ஆப்பிள் நிறுவனத்தின் லாபம் 31% வரை அதிகரிக்க காரணங்களாக இருந்தன. ஒட்டுமொத்தமாக ஆப்பிள் நிறுவன வருவாய் இதே கட்டத்தில் கடந்த ஆண்டை விட 17% வரை அதிகரித்துள்ளது. அதன்படி ஜப்பானை தவிர மற்ற பகுதிகளில் இருமடங்கு வளர்ச்சியை ஆப்பிள் பதிவு செய்துள்ளது.

    ஆப்பிள் நிறுவன வளர்ச்சி 2017 இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும் போது 32% அதிகரித்து 1150 கோடி டாலர்கள் லாபம் பெற்றுள்ளது. நியூ யார்க் பங்கு சந்தையில் ஆப்பிள் நிறுவன பங்குகள் 3% அதிகரித்தது. ஆப்பிள் இந்த காலாண்டு வளர்ச்சி காரணமாக ஆப்பிள் உலகின் அதிக மதிப்பு கொண்ட முதல் நிறுவனமாகி இருக்கிறது, இத்துடன் சந்தையில் ஆப்பிள் நிறுவன மதிப்பு ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்களை நெருங்குகிறது.

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு வரையிலான காலகட்டத்தில் 15% வளர்ச்சியை பதிவு செய்து உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் விற்பனையாளராக உயர்ந்து இருக்கிறது. இதனால் ஆப்பிள் நிறுவனம் உலக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. முதலிடத்தில் சாம்சங் நிறுவனம் இருந்தது. #AppleEarnings #iPhoneX
    Next Story
    ×