search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியா? - அன்புமணி ராமதாஸ் பேட்டி
    X

    பாராளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியா? - அன்புமணி ராமதாஸ் பேட்டி

    பாராளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்ற நிருபர்களின் கேள்விக்கு பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பதில் அளித்துள்ளார். #AnbumaniRamadoss #Parliamentelection
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தை அன்புமணி ராமதாஸ் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    தர்மபுரி மக்களின் 78 ஆண்டு கால கனவு திட்டமான தர்மபுரி-மொரப்பூர் ரெயில் பாதை திட்டம் தற்போது நிறைவேற உள்ளது.

    இத்திட்டத்திற்காக இதுவரை 19 முறை ரெயில்வே துறை அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். 2017-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இத்திட்டம் தற்போது ரூ.359 கோடியில் நிறைவேற்றப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது. விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ்கோயல் பங்கேற்கிறார்.

    தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்ட கால கனவை நான் போராடி பெற்றுள்ளேன். தர்மபுரி மாவட்டம் வழியாக செல்லும் காவிரி ஆற்றின் உபரி நீரை மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மாவட்டம் முழுவதும் பா.ம.க. சார்பில் கையெழுத்து பெறும் இயக்கம் நடத்தப்பட்டது. இதில் 10 லட்சத்து 20 ஆயிரம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு உள்ளன. இதனை முதல்-அமைச்சரிடம் அளித்து இந்த திட்டத்தை நிறைவேற்ற கோருவேன்.

    அதேபோல, தர்மபுரி சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் ஏனைய நீர்ப்பாசனத் திட்டங்களையும் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்துவேன். மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன்.



    தமிழக மக்களின் நலனுக்காகவே நாங்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து உள்ளோம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். 7 பேர் தமிழர்கள் விடுதலை, தமிழகத்தில் உள்ள பாசன திட்டங்கள் உள்பட பா.ம.க. அளித்துள்ள அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நிருபர்கள் அவரிடம், பாராளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டனர். அதற்கு அவர், தர்மபுரி தொகுதி தங்களுக்கா? அல்லது கூட்டணி கட்சிக்கா? என்று எனக்கு தெரியவில்லை. கட்சி தலைமை அனுமதித்தால், தர்மபுரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பென்னாகரம் பஸ் நிலையத்தில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையத்தை அன்புமணி ராமதாஸ் எம்.பி. திறந்து வைத்தார். அப்போது அவர் பஸ் நிலையத்தில் மேற்கூரை அமைப்பதற்கான பணியையும் தொடங்கி வைத்தார். #AnbumaniRamadoss #Parliamentelection
    Next Story
    ×