search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    100 பந்து கிரிக்கெட் தொடரில் டோனி, கோலி விளையாட வாய்ப்பு
    X

    100 பந்து கிரிக்கெட் தொடரில் டோனி, கோலி விளையாட வாய்ப்பு

    இங்கிலாந்து திட்டமிட்டுள்ள 100 பந்து கிரிக்கெட் தொடரில் டோனி, கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோரை விளையாட அனுமதிப்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #BCCI #ViratKohli #MSDhoni #100ballcricket

    புதுடெல்லி:

    முதலில் ஐந்து நாட்கள் டெஸ்ட் போட்டியாக விளையாடப்பட்ட கிரிக்கெட் போட்டிகள், பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டான 50 ஓவர் போட்டியாக மாறியது. பின்னர் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் டி20 ஓவராக மாறியது. தற்போது சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. சுமார் நான்கு மணி நேரத்திற்குள் போட்டி முடிந்துவிடும் என்பதால் ரசிகர்களும் அதிக அளவில் மைதானத்திற்கு படையெடுக்கிறார்கள்.

    டெஸ்ட் போட்டி 20 ஓவராக சுருங்கியதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 2020-ம் ஆண்டில் இருந்து 8 அணிகள் பங்கேற்கும் 100 பந்து போட்டி தொடரை தொடங்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. 16-ல் 15 ஓவர்கள், 6 பந்து வீதம் வீசப்படும். கடைசி ஓவரில் 10 பந்துகள் வீசப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் மற்ற நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஆனால் மற்ற நாடுகளில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. ஐபிஎல் தொடரின் பெருமை மற்றும் மார்க்கெட் மதிப்பை காப்பதற்காக இந்திய வீரர்கள் மற்ற லீக் தொடர்களில் விளையாட பிசிசிஐ அனுமதி மறுத்து வருகிறது. இதனால் இந்த தொடரிலும் இந்திய வீரர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என கூறப்படுகிறது.



    இந்நிலையில், இந்த 100 பந்து கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்களான டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோரை விளையாட அனுமதி அளிப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு இந்திய வீரர்கள் 100 பந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதிப்பட்டால், அந்த தொடர் அதிக வரவேற்பு பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.

    ஏற்கனவே இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள மகளிருக்கான கியா டி20 லீக்கில் இந்திய வீராங்கனைகள் விளையாட பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #BCCI #ViratKohli #MSDhoni #100ballcricket
    Next Story
    ×