search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்வதில் குழப்பம் இல்லை: எடியூரப்பா
    X

    பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்வதில் குழப்பம் இல்லை: எடியூரப்பா

    பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ஜனதா வேட்பாளர்களை தேர்வு செய்வதில் குழப்பம் இல்லை என்று அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா கூறினார். #Yeddyurappa #BJP
    பெங்களூரு :

    பாராளுமன்ற தேர்தல் குறித்து தமது கட்சி மேலிட தலைவர்களுடன் விவாதிப்பதற்காக கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேற்று டெல்லி சென்றார். அங்கு தலைவர்களை சந்திப்பதற்கு முன்பு, எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் எந்த குழப்பமும் இல்லை. எங்கள் கட்சியின் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம். எங்கள் கட்சியில் தற்போது எம்.பி.க்களாக உள்ளவர்களுக்கு மீண்டும் டிக்கெட் வழங்க வேண்டும் என்று கட்சி தொண்டர்கள் வலியுறுத்துகிறார்கள்.

    முடிவு எடுக்கவில்லை

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், புதிய வேட்பாளர்களை தேர்வு செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. எங்கள் கட்சி எம்.பி.க்களின் தொகுதிகளை தவிர பிற தொகுதிகளில் போட்டியிட அதிக எண்ணிக்கையில் விருப்பம் தெரிவிக்கிறார்கள்.

    அனைவரின் நம்பிக்கையை பெற்று வேட்பாளர்களை தேர்வு செய்வோம். பா.ஜனதாவில் சேருவது குறித்து நடிகை சுமலதாவிடம் நானோ அல்லது எங்கள் கட்சி தலைவர்களோ பேசவில்லை. எந்த கட்சி சார்பில் போட்டியிட வேண்டும் என்பதில் சுமலதா குழப்பத்தில் உள்ளார். தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் அவர் இன்னும் தெளிவான முடிவு எடுக்கவில்லை.

    எச்சரிக்கையுடன் பேச வேண்டும்

    இதனால் அனைத்தும் குழப்பமாக உள்ளது. அம்பரீஷ் குடும்பம் பற்றி முதல்-மந்திரி குமாரசாமி தரம் தாழ்த்தி பேசுவது சரியல்ல. பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார். #Yeddyurappa #BJP
    Next Story
    ×