search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் ஒப்பந்த முறைகேட்டில் விசாரணை தேவை - சிவிசியில் காங்கிரஸ் தலைவர்கள் புகார்
    X

    ரபேல் ஒப்பந்த முறைகேட்டில் விசாரணை தேவை - சிவிசியில் காங்கிரஸ் தலைவர்கள் புகார்

    ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் மத்திய விஜிலன்ஸ் கமிஷனில் (சிவிசி) காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இன்று மனு அளித்துள்ளனர். #Rafale #Congress #CVC
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் - பாஜக இடையே வார்த்தைப்போர் அதிகரித்து வருகிறது. ரபேல் விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரிக்க வலியுறுத்தி மத்திய கணக்கு தணிக்கை அமைப்பிடம் (சிஏஜி) கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி மனு அளித்தது.

    இந்நிலையில், மத்திய விஜிலன்ஸ் கமிஷ்னர் கே.வி.சவுத்ரியை இன்று சந்தித்த காங்கிரஸ் குழு, ரபேல் ஒப்பந்த முறைகேடு தொடர்பான தகவல்கள் அடங்கிய விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், பொது கருவூலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பிற்கு அபாயம் ஏற்படுத்தியதாகவும் மத்திய அரசின்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இப்புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி சவுத்திரியிடம் காங்கிரஸ் தலைவர்கள் மனு தந்தனர். மேலும், இந்த விஷயத்தில் நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சரும் பொய்கள் கூறி வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குலாம் நபி ஆசாத், அகமது படேல், ஆனந்த ஷர்மா, கபில் சிபில், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் மனு சிங்வி, மனிஷ் திவாரி, விவேக் தன்கா, பர்மோத் திவாரி மற்றும் பிரனாவ் ஜா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இந்த சந்திப்பில் இருந்துள்ளனர்.
    Next Story
    ×