search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பம்பை ஆற்றில் செல்லும் வெள்ளத்தால் மூழ்கியுள்ள தேவஸ்தான அலுவலகம்
    X
    பம்பை ஆற்றில் செல்லும் வெள்ளத்தால் மூழ்கியுள்ள தேவஸ்தான அலுவலகம்

    ஓணம் பூஜைக்கு பக்தர்கள் வர வேண்டாம் என சபரிமலை நிர்வாகம் அறிவுறுத்தல்

    பாதைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. #KeralaFlood #Sabarimala
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஒட்டுமொத்த மாநிலமும் கடுமையான பேரழிவை சந்தித்தது. 10 நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ள நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இந்த பேரழிவால் சுமார் 250-க்கும் அதிகமான மக்கள் பலியாகினர்.

    கேரளாவில் ஓடும் பல ஆறுகளில் இன்னும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், ஓணம் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஓணம் பண்டிகையை ஒட்டி வரும் 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடை திறக்கபட உள்ளது.

    எனினும், பம்பை ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதாலும், சபரிமலைக்கு செல்லும் மலைப்பாதையில் மரங்கள் விழுந்து கிடப்பதால் பாதைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால், பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என சபரிமலை தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. 
    Next Story
    ×