search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தியை பச்சை குழந்தை என கூறிய எடியூரப்பா - காங். தலைவர்கள் கண்டனம்
    X

    ராகுல் காந்தியை பச்சை குழந்தை என கூறிய எடியூரப்பா - காங். தலைவர்கள் கண்டனம்

    பாரதிய ஜனதா தலைவர் எடியூரப்பா தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தியை பச்சா (பச்சை குழந்தை) என கூறியதால் காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #RahulGandhi #Yeddyurappa
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை பிடிக்க ஆளும் காங்கிரஸ் கட்சியினருக்கும், பா.ஜனதா கட்சியினருக்கும் இடையே கடும் போட்டா போட்டி நிலவுகிறது.

    அங்கு பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒரு கூட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா, ‘பிரதமர் பதவியில் இருப்பதற்கு மோடி தகுதி அற்றவர்’என விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    நேற்று உடுப்பியில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா கூறுகையில், ‘சித்தராமையா என்ற பெயருக்கு ஊழல் என அகராதியில் விரைவில் இடம் பெறும். அந்த அளவுக்கு சித்தராமையா ஊழலில் திளைத்து வருகிறார்’ என்றார்.

    இந்த கூட்டத்தில் பா.ஜ.க.வின் முதல்- மந்திரி வேட்பாளர் எடியூரப்பா பேசும்போது கூறியதாவது:-

    காங்கிரசுக்கு பிரசாரம் செய்வதற்காக அந்த பச்சாவை (பச்சை குழந்தை) அழைத்து வந்திருக்கிறார்கள். அந்த பச்சா வந்த போதே தெரிந்து விட்டது. கர்நாடகாவில் பா.ஜ.க. வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.



    47 வயதான காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பச்சா என கேலியாக சீண்டியது காங்கிரஸ் வட்டாரத்தில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா கூறியதாவது:-

    75 வயது எடியூரப்பா சிறுபிள்ளையை போல் பொறுப்பில்லாமல் பேசியுள்ளார். அரசியல் நாகரீகமில்லாமல் பேசுவதை எடியூரப்பா நிறுத்திக் கொள்ள வேண்டும். சிறைப் பறவைகளான எடியூரப்பாவுக்கும், அமித்ஷாவுக்கும் காங்கிரஸ் தலைவர்களை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #RahulGandhi #Yeddyurappa #KarnatakaElection2018
    Next Story
    ×